• Nov 23 2024

இந்தியாவில் சவேந்திர சில்வாவிற்கு கிடைத்த சிறப்பு கௌரவம்..!

Chithra / Dec 13th 2023, 7:41 am
image

 

இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இந்திய இராணுவம் சிறப்பு கௌரவத்தினை வழங்கியுள்ளது.

அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய இராணுவ நிகழ்வு ஒன்றின் பிரதம அதிதியாக சவேந்திர சில்வா அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய இராணுவ அகடமியின் பயிலுனர் படையினரின் பயிற்சி நிறைவு நிகழ்வில் சவேந்திர சில்வா பிரதம அதிதியாக பங்கேற்றுள்ளார்.

இதன்போது பயிற்சி முடிவடைந்து செல்லும் படையினர் விசேட இராணுவ அணிவகுப்பொன்றையும் சவேந்திர சில்வாவுக்கு வழங்கியுள்ளனர்.

இந்த இராணுவ பயிற்சியை சிறந்த முறையில் பூர்த்தி செய்து திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கௌரவிக்கும் வகையில் வாள்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா,

பயிற்சி பெற்று கலைந்து செல்லும் படையினருக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், கடின உழைப்பு மற்றும் கூட்டு முயற்சி என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கியுள்ளார்.

மேலும் இந்திய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் அதி உயர் தரங்களைக் கொண்டது எனவும் அவர் பாராட்டியுள்ளார். 


இந்தியாவில் சவேந்திர சில்வாவிற்கு கிடைத்த சிறப்பு கௌரவம்.  இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு இந்திய இராணுவம் சிறப்பு கௌரவத்தினை வழங்கியுள்ளது.அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய இராணுவ நிகழ்வு ஒன்றின் பிரதம அதிதியாக சவேந்திர சில்வா அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.இந்திய இராணுவ அகடமியின் பயிலுனர் படையினரின் பயிற்சி நிறைவு நிகழ்வில் சவேந்திர சில்வா பிரதம அதிதியாக பங்கேற்றுள்ளார்.இதன்போது பயிற்சி முடிவடைந்து செல்லும் படையினர் விசேட இராணுவ அணிவகுப்பொன்றையும் சவேந்திர சில்வாவுக்கு வழங்கியுள்ளனர்.இந்த இராணுவ பயிற்சியை சிறந்த முறையில் பூர்த்தி செய்து திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை கௌரவிக்கும் வகையில் வாள்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜெனரல் சவேந்திர சில்வா,பயிற்சி பெற்று கலைந்து செல்லும் படையினருக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், கடின உழைப்பு மற்றும் கூட்டு முயற்சி என்பனவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கியுள்ளார்.மேலும் இந்திய இராணுவ பயிற்சி நடவடிக்கைகள் சர்வதேச ரீதியில் அதி உயர் தரங்களைக் கொண்டது எனவும் அவர் பாராட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement