• Jan 16 2025

சவேந்திர சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு

Chithra / Jan 9th 2025, 11:36 am
image

 

முன்னாள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின்  அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த டிசம்பர் 31ம் திகதியுடன் ஓய்வுபெற்றிருந்தார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில், இதுவரை அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில் சவேந்திர சில்வா, பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக பணியாற்றிய காலத்தில் பயன்படுத்திய அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சவேந்திர சில்வாவின் பாதுகாப்புக்கு இணைக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் ஆகியோர் தற்போது அவரவர் பணியாற்றும் சொந்த ராணுவ ரெஜிமண்டுகளுக்கு  மீளத்திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  


சவேந்திர சில்வாவின் அலுவலகத்திற்கு பூட்டு  முன்னாள் பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வாவின்  அலுவலகம் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது.பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக இருந்த ஜெனரல் சவேந்திர சில்வா, கடந்த டிசம்பர் 31ம் திகதியுடன் ஓய்வுபெற்றிருந்தார்.பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை முற்றாக ஒழிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில், இதுவரை அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.இந்நிலையில் சவேந்திர சில்வா, பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக பணியாற்றிய காலத்தில் பயன்படுத்திய அலுவலகம் தற்போது மூடப்பட்டுள்ளது.அங்கு பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் சவேந்திர சில்வாவின் பாதுகாப்புக்கு இணைக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் ஆகியோர் தற்போது அவரவர் பணியாற்றும் சொந்த ராணுவ ரெஜிமண்டுகளுக்கு  மீளத்திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement