• May 17 2024

பேரதிர்ச்சி! கொத்துக்கொத்தாக காவு வாங்கும் சூடான் உள்நாட்டு போர்- 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Aug 23rd 2023, 8:08 pm
image

Advertisement

சூடானில் தொடரும் உள்நாட்டு போர் காரணமாக  நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சுமார் 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகி  உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் வெடித்தது. இது மிகப் பெரிய அளவில் உள்நாட்டுப் போராக  உருவெடுத்துள்ளது. இதனால்  தலைநகர் கார்தோம் உள்ளிட்ட பல நகரங்கள்  போர்க்களங்களாக காட்சி அளிக்கின்றன.

இந்த உள்நாட்டு போர் தொடர்வதால் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவிவரும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். நாட்டின் சுகாதார வசதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. சரியான உணவு கிடைக்காமல்  பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் அந்நாட்டு குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர்.

சூடானில் இயங்கிவரும் 'சேவ் தி சில்ட்ரன்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில்  குழந்தைகள் சாவு பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளதால் அதைக்கண்டு உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 'பட்டினியால் தினமும் குழந்தைகள் உயிரிழப்பதை காண்கிறோம். கடந்த மே முதல், ஜூலை வரையில், 316 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக , 2,400 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடாரிப் மாகாணத்தில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில், 132 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலத்தில் உயிரிழந்தனர். 

தலைநகர் கார்தோமில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லத்தில், 20க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்பட 50 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சிகிச்சை பெற முடியாமல், 31,000 குழந்தைகள் தவித்து வருகின்றனர்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.  ஆனால் உணவு இல்லாத சூழ்நிலையால் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் நிலை சூடானில் ஏற்பட்டுள்ளது. இதை  ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள்  கண்டும் காணாமல் இருப்பது பெரும்  அவல நிலையை ஏற்படுத்துகின்றது.


பேரதிர்ச்சி கொத்துக்கொத்தாக காவு வாங்கும் சூடான் உள்நாட்டு போர்- 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழப்பு samugammedia சூடானில் தொடரும் உள்நாட்டு போர் காரணமாக  நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் சுமார் 500 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக  தகவல் வெளியாகி  உலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் வெடித்தது. இது மிகப் பெரிய அளவில் உள்நாட்டுப் போராக  உருவெடுத்துள்ளது. இதனால்  தலைநகர் கார்தோம் உள்ளிட்ட பல நகரங்கள்  போர்க்களங்களாக காட்சி அளிக்கின்றன.இந்த உள்நாட்டு போர் தொடர்வதால் நாட்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு நிலவிவரும் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். நாட்டின் சுகாதார வசதி முற்றிலுமாக முடங்கியுள்ளது. சரியான உணவு கிடைக்காமல்  பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் அந்நாட்டு குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்து வருகின்றனர்.சூடானில் இயங்கிவரும் 'சேவ் தி சில்ட்ரன்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில்  குழந்தைகள் சாவு பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளதால் அதைக்கண்டு உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 'பட்டினியால் தினமும் குழந்தைகள் உயிரிழப்பதை காண்கிறோம். கடந்த மே முதல், ஜூலை வரையில், 316 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான குழந்தைகள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக , 2,400 குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிழக்கு கடாரிப் மாகாணத்தில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில், 132 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏப்ரல் முதல், ஜூலை வரையிலான காலத்தில் உயிரிழந்தனர். தலைநகர் கார்தோமில் உள்ள அரசு ஆதரவற்றோர் இல்லத்தில், 20க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் உட்பட 50 குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு சிகிச்சை பெற முடியாமல், 31,000 குழந்தைகள் தவித்து வருகின்றனர்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி.  ஆனால் உணவு இல்லாத சூழ்நிலையால் குழந்தைகள் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் நிலை சூடானில் ஏற்பட்டுள்ளது. இதை  ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள்  கண்டும் காணாமல் இருப்பது பெரும்  அவல நிலையை ஏற்படுத்துகின்றது.

Advertisement

Advertisement

Advertisement