• Nov 24 2024

இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

Chithra / Sep 10th 2024, 8:31 am
image

 

நாட்டில் சுமார் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இதேவேளை இலங்கையில் வாழும் குடும்பங்களில் 1/4 பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உயரம் குறைதல், பலவீனமாதல், நிறை குறைவாக இருத்தல், நுண் போசனைக் குறைபாடுகள் போன்ற நான்கு விடயங்களின் ஊடாக சிறுவர் போசாக்குக் குறைபாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், முன்பள்ளி உணவு மற்றும் பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தரமான உணவு வழங்கலிற்கான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை வழிகாட்டல்கள் ஆகியவற்றின் நடைமுறைபடுத்தலை கண்காணித்தல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் வாழும் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்  நாட்டில் சுமார் 16000 குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை இலங்கையில் வாழும் குடும்பங்களில் 1/4 பகுதியினர் அயலவர்களின் உணவின் மூலம் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயங்கள் குழந்தைகளின் போசாக்கின்மை நிலைமையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட, நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.உயரம் குறைதல், பலவீனமாதல், நிறை குறைவாக இருத்தல், நுண் போசனைக் குறைபாடுகள் போன்ற நான்கு விடயங்களின் ஊடாக சிறுவர் போசாக்குக் குறைபாட்டு நிலைமைகள் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த அறிக்கையில், முன்பள்ளி உணவு மற்றும் பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தரமான உணவு வழங்கலிற்கான பாடசாலைச் சிற்றுண்டிச்சாலை வழிகாட்டல்கள் ஆகியவற்றின் நடைமுறைபடுத்தலை கண்காணித்தல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement