• Nov 23 2024

அடித்து நொறுக்கப்பட்ட நாடாளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரின் கடை! - அம்பாறையில் சம்பவம்

Chithra / Oct 28th 2024, 8:25 am
image

 அம்பாறை மாவட்டத்தில் இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் பாராளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரது கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் பிரதான வீதியில் அமைந்துள்ள தற்காலிக கடை ஒன்றே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த கடை உரிமையாளர் அம்பாறை - திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்   ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  சார்பாக சங்கு சின்னத்தில் இலக்கம் 5 இல் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் பிரகாஸின் ஆதரவாளரது கடையே அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு   குறித்த வேட்பாளர் சென்று  சேதமடைந்த கடையை பார்வையிட்டதுடன்,

தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க ஆதரவாளருடன் சென்றுள்ளார்.

இதன்போது பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமையின் காரணமாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு செய்ய உள்ளதாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த கடையில் அரசியல் விடயங்களை தாங்கள் உரையாடுவதாகவும் இதனால் இக்கடை ஏனைய தரப்புகளால் உடைக்கப்பட்டிருக்க கூடும் என வேட்பாளர் வைத்தியர் பிரகாஸ் தெரிவித்தார்.


அடித்து நொறுக்கப்பட்ட நாடாளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரின் கடை - அம்பாறையில் சம்பவம்  அம்பாறை மாவட்டத்தில் இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒன்றில் பாராளுமன்ற வேட்பாளரின் ஆதரவாளரது கடை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் பிரதான வீதியில் அமைந்துள்ள தற்காலிக கடை ஒன்றே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.குறித்த கடை உரிமையாளர் அம்பாறை - திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்   ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  சார்பாக சங்கு சின்னத்தில் இலக்கம் 5 இல் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் பிரகாஸின் ஆதரவாளரது கடையே அடித்து உடைக்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு   குறித்த வேட்பாளர் சென்று  சேதமடைந்த கடையை பார்வையிட்டதுடன்,தாக்குதல் சம்பவம் தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க ஆதரவாளருடன் சென்றுள்ளார்.இதன்போது பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமையின் காரணமாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு செய்ய உள்ளதாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.மேலும் குறித்த கடையில் அரசியல் விடயங்களை தாங்கள் உரையாடுவதாகவும் இதனால் இக்கடை ஏனைய தரப்புகளால் உடைக்கப்பட்டிருக்க கூடும் என வேட்பாளர் வைத்தியர் பிரகாஸ் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement