• May 22 2024

தமிழ் சிங்கள புத்தாண்டில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு..? வெளியான தகவல்

Chithra / Mar 13th 2024, 2:40 pm
image

Advertisement

  

தமிழ் சிங்கள புத்தாண்டின் போது கோழி இறைச்சியை தட்டுப்பாடு இன்றி வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

பண்டிகைக் காலத்தில் மாத்திரமன்றி அதன் பின்னரும் நாட்டில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என கோழிப்பண்ணை தொழில்துறையினர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.

ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்திக்கான செலவைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் இந்த விலைகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, 

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் பொதுமக்கள் மிகவும் கரிசனையுடன் காணப்படுவதால் நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் குறைந்தபட்ச விலையில் கோழி இறைச்சியை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, 

தற்போது கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள பிரதான விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

தமிழ் சிங்கள புத்தாண்டில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு. வெளியான தகவல்   தமிழ் சிங்கள புத்தாண்டின் போது கோழி இறைச்சியை தட்டுப்பாடு இன்றி வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் விவசாய அமைச்சில் இடம்பெற்றது.பண்டிகைக் காலத்தில் மாத்திரமன்றி அதன் பின்னரும் நாட்டில் கோழி இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என கோழிப்பண்ணை தொழில்துறையினர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்திக்கான செலவைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் இந்த விலைகள் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.இதன்போது கருத்து தெரிவித்த விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையில் பொதுமக்கள் மிகவும் கரிசனையுடன் காணப்படுவதால் நுகர்வோர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் குறைந்தபட்ச விலையில் கோழி இறைச்சியை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, தற்போது கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ள பிரதான விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement