• Apr 02 2025

வைத்தியர்கள் பற்றாக்குறை - மருத்துவமனைகளை மூடவேண்டிய அபாயம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Chithra / May 31st 2024, 8:23 am
image

 

மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினை மேலும் தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

போதிய வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால், நாடு முழுவதிலும் உள்ள பல புற வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு மருத்துவர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்காவிட்டால், 

வைத்தியர்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளை மூடுவது குறித்து தீர்மானிக்கவேண்டிய நிலையேற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

மருத்துவமனைகளிற்கு நியமிக்கப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததால் நாட்டின் மருத்துவதுறையில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளதாக ஊடக பேச்சாளர் வைத்தியர் சமால் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.


வைத்தியர்கள் பற்றாக்குறை - மருத்துவமனைகளை மூடவேண்டிய அபாயம். விடுக்கப்பட்ட எச்சரிக்கை  மருத்துவர்கள் பற்றாக்குறை பிரச்சினை மேலும் தொடர்ந்தால் மருத்துவமனைகளை மூடவேண்டிய நிலை ஏற்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.போதிய வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால், நாடு முழுவதிலும் உள்ள பல புற வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.உரிய தரப்பினர் நாட்டின் மருத்துவ அமைப்பிற்கு தேவையான அளவிற்கு மருத்துவர்களை நியமிப்பதற்கு அனுமதி வழங்காவிட்டால், வைத்தியர்கள் இன்றி பாதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளை மூடுவது குறித்து தீர்மானிக்கவேண்டிய நிலையேற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.மருத்துவமனைகளிற்கு நியமிக்கப்படும் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்காததால் நாட்டின் மருத்துவதுறையில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளதாக ஊடக பேச்சாளர் வைத்தியர் சமால் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement