அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் சந்தையில் சில அரிசி வகைகளுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் சந்தைக்கு இதுவரையில் உரிய முறையில் அரிசி கிடைப்பதில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நாளாந்தம் 6,500 முதல் 6,600 மெற்றிக் டன் அரிசி மக்கள் பாவனைக்காக நுகரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக நேற்று பிற்பகல் வரை சுமார் 16,000 மெற்றிக் டன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
அதில் 6,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 10,000 மெற்றிக் டன் நாட்டு அரிசியும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த 10 நாட்களில் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளிலிருந்து சுமார் 10,000 மெற்றிக் டன் அரிசி சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அரிசி வகைகளுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு. குற்றம்சாட்டும் வர்த்தகர்கள் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் சந்தையில் சில அரிசி வகைகளுக்குத் தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக அரசாங்கம் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் சந்தைக்கு இதுவரையில் உரிய முறையில் அரிசி கிடைப்பதில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் நாளாந்தம் 6,500 முதல் 6,600 மெற்றிக் டன் அரிசி மக்கள் பாவனைக்காக நுகரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தட்டுப்பாட்டிற்குத் தீர்வாக நேற்று பிற்பகல் வரை சுமார் 16,000 மெற்றிக் டன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். அதில் 6,000 மெற்றிக் டன் பச்சை அரிசியும், 10,000 மெற்றிக் டன் நாட்டு அரிசியும் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, கடந்த 10 நாட்களில் பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகளிலிருந்து சுமார் 10,000 மெற்றிக் டன் அரிசி சந்தைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.