• Feb 06 2025

நாட்டில் அரிசிக்குத் தொடரும் தட்டுப்பாடு - இன்று விசேட சோதனை நடவடிக்கை

Chithra / Dec 8th 2024, 8:40 am
image

 

பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அரிசி ஆலைகளில் தினசரி உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு, தற்போதைய இருப்பு மற்றும் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் அரிசியின் அளவு தொடர்பான அறிக்கை இதன்போது பெறப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய, எதிர்காலத்தில் அனைத்து அரிசி ஆலைகளிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில், இன்று முதல் அனைத்து அரிசி ஆலைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். 

அத்துடன், சதொச ஊடாக அரிசியை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அங்கு அரிசி மற்றும் தேங்காய் என்பன கையிருப்பில் இல்லை எனவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். 

அதேநேரம், தங்களது மாதாந்த நுகர்வு பொருட்களுக்கான செலவில் தற்போது அதிகளவாகப் பங்கினை அரிசிக்காகச் செலவிட வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளார். 

நாட்டில் அரிசிக்குத் தொடரும் தட்டுப்பாடு - இன்று விசேட சோதனை நடவடிக்கை  பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.அரிசி ஆலைகளில் தினசரி உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு, தற்போதைய இருப்பு மற்றும் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் அரிசியின் அளவு தொடர்பான அறிக்கை இதன்போது பெறப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைய, எதிர்காலத்தில் அனைத்து அரிசி ஆலைகளிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று (07) இடம்பெற்ற கலந்துரையாடலில், இன்று முதல் அனைத்து அரிசி ஆலைகளுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன், சதொச ஊடாக அரிசியை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், அங்கு அரிசி மற்றும் தேங்காய் என்பன கையிருப்பில் இல்லை எனவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதேநேரம், தங்களது மாதாந்த நுகர்வு பொருட்களுக்கான செலவில் தற்போது அதிகளவாகப் பங்கினை அரிசிக்காகச் செலவிட வேண்டியுள்ளதாகவும் நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement