• Sep 21 2024

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைபாடுகள்...! கிழக்கு ஆளுநரை சந்தித்த இம்ரான் எம். பி...!

Sharmi / May 29th 2024, 9:13 am
image

Advertisement

கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்படவுள்ள  பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தில் நிலவும் சர்ச்சை தொடர்பாக கிழக்கு ஆளுநரை இம்ரான் எம்.பி  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிழக்கு மாகாணத்தில் நேற்றையதினம்(28) வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக ஆசிரியர் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய பல விண்ணப்பதாரிகள் இம்ரான் எம். பி யின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக நேற்றையதினம்(28) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை இம்ரான் எம்.பி ஆளுநர் செயலகத்தில் சந்தித்து ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக  கலந்துரையாடினார்.

இதன் பொழுது ஆளுநரினால் எந்த ஒரு விண்ணப்பதாரிகளுக்கும் பாதிப்பு இல்லாதவாறு ஆசிரியர் நியமனம் சில நாட்கள் தாமதமாகினாலும் விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு உரிய  அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கிள்ளதாக ஆளுநர் தெரிவித்ததாக இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் குறைபாடுகள். கிழக்கு ஆளுநரை சந்தித்த இம்ரான் எம். பி. கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்படவுள்ள  பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தில் நிலவும் சர்ச்சை தொடர்பாக கிழக்கு ஆளுநரை இம்ரான் எம்.பி  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிழக்கு மாகாணத்தில் நேற்றையதினம்(28) வழங்கப்படவிருந்த பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக ஆசிரியர் நேர்முகப்பரீட்சைக்கு தோற்றிய பல விண்ணப்பதாரிகள் இம்ரான் எம். பி யின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.இவ்விடயம் தொடர்பாக நேற்றையதினம்(28) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை இம்ரான் எம்.பி ஆளுநர் செயலகத்தில் சந்தித்து ஆசிரியர் நியமனத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் தொடர்பாக  கலந்துரையாடினார்.இதன் பொழுது ஆளுநரினால் எந்த ஒரு விண்ணப்பதாரிகளுக்கும் பாதிப்பு இல்லாதவாறு ஆசிரியர் நியமனம் சில நாட்கள் தாமதமாகினாலும் விரைவில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு உரிய  அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கிள்ளதாக ஆளுநர் தெரிவித்ததாக இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement