பல வருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் இன்றையதினம் கொடிகாமம் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும்,
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
இந்த கையெழுத்துப் போராட்டத்திற்கு கொடிகாமம் பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆதரவளித்து கைழுத்துக்களை வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கொடிகாமத்தில் கையெழுத்துப் போராட்டம் பல வருடங்களாக விசாரணை என்னும் பெயரில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப் போராட்டம் இன்றையதினம் கொடிகாமம் பேருந்துத் தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது.பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.இந்த கையெழுத்துப் போராட்டத்திற்கு கொடிகாமம் பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஆதரவளித்து கைழுத்துக்களை வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.