துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரை 7 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாத்தறை பிரதம நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பணிபுரிந்தபோது துப்பாக்கியைத் திருடியுள்ளார்.
அதன்பின்னர், குறித்த துப்பாக்கியை பாடகரிடம் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரபல பாடகர் ஷான்புத்தா உட்பட மூவரை தடுப்பு காவலில் வைக்க உத்தரவு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் ஷான் புத்தா, அவரது மேலாளர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரை 7 நாட்களுக்குத் தடுப்பு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை பிரதம நீதவான் அருண புத்ததாச முன்னிலையில் சந்தேகநபர்களை முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சந்தேகநபரான பொலிஸ் கான்ஸ்டபிள் மாத்தறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பணிபுரிந்தபோது துப்பாக்கியைத் திருடியுள்ளார். அதன்பின்னர், குறித்த துப்பாக்கியை பாடகரிடம் கொடுத்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.