• Apr 22 2025

வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மறுபடியும் இடம்கொடுக்க கூடாது - சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்து

Thansita / Apr 21st 2025, 4:16 pm
image

வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அதற்கானதாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற (21.04.2015) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் கூறுகையில் - 

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் 6 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

அதேநேரம் உள்ளூராட்சி என்பது உள்ளூருக்கான அதிகாரங்களை கொண்டது. அது அபிவிருத்தியையும் வலுவான சமூகக் கட்டமைப்பின் பின்னணியையும் கொண்டது.

ஒவ்வொரு உள்ளூராட்சியும் அந்தந்த பிரதேசங்களைக் கொண்ட பிரதிநிதிகளை குறிப்பாக தமிழர் பூர்வீக கட்சிகளை கொண்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.

தமிழரசுக் கட்சி இம்முறை வடக்கு கிழக்கில் 58 சபைகளில் போட்டியிடுகின்றது. இந்த சபைகளுக்கு நாம் சிறப்பான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்

இந்நேரம் ஊழல் இல்லாத சபைகளுக்கே நிதி என ஜனாதிபதி கூறுவதை ஏற்க முடியாது.

கடந்த காலத்தில் வடக்கு மாகாண சபைக்கு அனுப்பப்பட நிதியில் எந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டது என்பதை எவராவது நிரூபியுங்கள். திருப்பி அனுப்பப்பட்டது என கூறும் தரப்பினருக்கு இதை நான் சாவாலாக விடுகின்றேன்.

தேசிய மக்கள் சக்தியும் இம்முறை வடக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் போடியிடுகின்றது.

ஆனால் எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாகஇ சுதந்திரமாக செயற்பட முடியாதிருக்கின்றார்களோ அதே போன்றவர்களாகவே இவர்களும் தென்னிலங்கையில் நிகழ்ச்சி நிரலை நிறைவுசெய்யும் ஏவுகருவிகளாகவே இருப்பர்.

குறிப்பாக சுயாதீனமாக செயற்பட குறித்த ஜேவிபி கட்சியின் கொள்கை நிலைப்பாடும் இடங்கொடுக்காது. இந்நேரம் கடந்த தேர்தல்களில் சொன்னது எதனையும் இதுவரை செய்யாதவர்கள் இனி செய்வார்களா?

அநுர தரப்பு அரச ஆதரவு சக்திகள் சுயேச்சையாகவும் நேரடியாகவும் எமது மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து குறிப்பாக டக்ளஸ் தேவனந்தா மற்றும் அங்கயனின் வாக்குகளை அபகரித்தே வெற்றி பெற்றுள்ளனர்

அந்தவகையில் சிங்கள மேலாதிக்கம் இனி வடக்கில் எடுபடக்கூடாது. அதற்கு மக்கள் தெளிவுடன் செயற்படுவது அவசியம்

மேலும் அரசியல் கைதிகள் விடுதலை என கூறுவது ஒவ்வொரு தேர்தல் கால பேசுபொருளே தவிர அது உண்மையான பேச்சுக்கள் அல்ல.

அநுர நினைத்திருந்தால் தண்டனை பெறும் தமிழ் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவித்திருக்கலாம். அதை ஏன் செய்யவில்லை?

அநுர அரசு ஒரு மாற்றத்துக்கானவர்களாக இருந்தால் இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்கட்டாக விடுவிப்பை செய்திருக்கலாலாம். அதை செய்ய இவர்கள் விரும்பமாட்டார்கள்.

இவர்களே இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் மிகவும் இனவாதத்துடன் பயணிப்பவர்கள்.

மேலும் ஊழல் மோசடியை இல்லாதொழிப்போம் என்று கூறும் இவர்கள் இன்று ஊழலையும் மோசடியையும் கடத்தல்களையும் செய்கின்றனர்.

இந்நேரம் எமது முதலமைச்சர் ஊழல் செய்யவில்லை. ஆனால் வினைத்திறனற்றவர் என்பது உண்மைதான் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மறுபடியும் இடம்கொடுக்க கூடாது - சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்து வடக்கில் காலூன்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தியின் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் அரசியல் ரீதியில் இடம்கொடுக்க கூடாது என வலியுறுத்தியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வரவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அதற்கானதாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற (21.04.2015) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்அவர் மேலும் கூறுகையில் - உள்ளூராட்சி மன்ற தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் 6 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் எதிர்பார்க்கின்றோம்.அதேநேரம் உள்ளூராட்சி என்பது உள்ளூருக்கான அதிகாரங்களை கொண்டது. அது அபிவிருத்தியையும் வலுவான சமூகக் கட்டமைப்பின் பின்னணியையும் கொண்டது.ஒவ்வொரு உள்ளூராட்சியும் அந்தந்த பிரதேசங்களைக் கொண்ட பிரதிநிதிகளை குறிப்பாக தமிழர் பூர்வீக கட்சிகளை கொண்ட பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது அவசியம்.தமிழரசுக் கட்சி இம்முறை வடக்கு கிழக்கில் 58 சபைகளில் போட்டியிடுகின்றது. இந்த சபைகளுக்கு நாம் சிறப்பான வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்இந்நேரம் ஊழல் இல்லாத சபைகளுக்கே நிதி என ஜனாதிபதி கூறுவதை ஏற்க முடியாது.கடந்த காலத்தில் வடக்கு மாகாண சபைக்கு அனுப்பப்பட நிதியில் எந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டது என்பதை எவராவது நிரூபியுங்கள். திருப்பி அனுப்பப்பட்டது என கூறும் தரப்பினருக்கு இதை நான் சாவாலாக விடுகின்றேன்.தேசிய மக்கள் சக்தியும் இம்முறை வடக்கில் உள்ள அனைத்து சபைகளிலும் போடியிடுகின்றது.ஆனால் எவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாகஇ சுதந்திரமாக செயற்பட முடியாதிருக்கின்றார்களோ அதே போன்றவர்களாகவே இவர்களும் தென்னிலங்கையில் நிகழ்ச்சி நிரலை நிறைவுசெய்யும் ஏவுகருவிகளாகவே இருப்பர்.குறிப்பாக சுயாதீனமாக செயற்பட குறித்த ஜேவிபி கட்சியின் கொள்கை நிலைப்பாடும் இடங்கொடுக்காது. இந்நேரம் கடந்த தேர்தல்களில் சொன்னது எதனையும் இதுவரை செய்யாதவர்கள் இனி செய்வார்களாஅநுர தரப்பு அரச ஆதரவு சக்திகள் சுயேச்சையாகவும் நேரடியாகவும் எமது மக்களை ஏமாற்றி வாக்குகளை அபகரித்து குறிப்பாக டக்ளஸ் தேவனந்தா மற்றும் அங்கயனின் வாக்குகளை அபகரித்தே வெற்றி பெற்றுள்ளனர்அந்தவகையில் சிங்கள மேலாதிக்கம் இனி வடக்கில் எடுபடக்கூடாது. அதற்கு மக்கள் தெளிவுடன் செயற்படுவது அவசியம்மேலும் அரசியல் கைதிகள் விடுதலை என கூறுவது ஒவ்வொரு தேர்தல் கால பேசுபொருளே தவிர அது உண்மையான பேச்சுக்கள் அல்ல.அநுர நினைத்திருந்தால் தண்டனை பெறும் தமிழ் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவித்திருக்கலாம். அதை ஏன் செய்யவில்லைஅநுர அரசு ஒரு மாற்றத்துக்கானவர்களாக இருந்தால் இன நல்லிணக்கத்துக்கு எடுத்துக்கட்டாக விடுவிப்பை செய்திருக்கலாலாம். அதை செய்ய இவர்கள் விரும்பமாட்டார்கள்.இவர்களே இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் மிகவும் இனவாதத்துடன் பயணிப்பவர்கள்.மேலும் ஊழல் மோசடியை இல்லாதொழிப்போம் என்று கூறும் இவர்கள் இன்று ஊழலையும் மோசடியையும் கடத்தல்களையும் செய்கின்றனர்.இந்நேரம் எமது முதலமைச்சர் ஊழல் செய்யவில்லை. ஆனால் வினைத்திறனற்றவர் என்பது உண்மைதான் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement