• Nov 28 2024

தமிழ் பேசும் சமூகங்களின் உறவுப் பாலமாக சிறிதரன் செயற்படுவார்...! வேலுகுமார் நம்பிக்கை...!samugammedia

Sharmi / Jan 22nd 2024, 12:35 pm
image

அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து பலமானதொரு தமிழ் பேசும் மக்களின் சக்தியாக முன்னோக்கி பயணிப்பதற்கு தமிழரசு கட்சியின் புதிய தலைவர் உறவுப் பாலமாக இருப்பாரென தாம் நம்புவதாக  கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் மலையகத்துக்கும் இடையிலான உறவு பல தசாப்தங்களாவே தொடர்கின்றன. தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்தவர்களெல்லாம் மலையகத் தமிழர்களையும் அரவணைத்துக்கொண்டே பயணித்துள்ளனர், அவர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரலும் கொடுத்துள்ளனர்.

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு ஒற்றுமை என்பமே பெரும் சக்தியாக உள்ளது, அந்த ஒற்றுமையை சீர்குலைக்க பேரினவாத சக்திகள் முற்பட்டுவருகின்றன. எனவே, இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் சமூகங்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

அதற்கான ஓர் உறவு பாலமாக தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் இருப்பார் என நம்புகின்றோம்.

தலைமைப் பதவியில் இருந்துகொண்டு, தமது சேவைகளை அவர் சிறப்பாக முன்னெடுக்கவும் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ் பேசும் சமூகங்களின் உறவுப் பாலமாக சிறிதரன் செயற்படுவார். வேலுகுமார் நம்பிக்கை.samugammedia அனைத்து தமிழ் தரப்பினரையும் ஒன்றிணைத்து பலமானதொரு தமிழ் பேசும் மக்களின் சக்தியாக முன்னோக்கி பயணிப்பதற்கு தமிழரசு கட்சியின் புதிய தலைவர் உறவுப் பாலமாக இருப்பாரென தாம் நம்புவதாக  கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார் தெரிவித்தார்.தமிழரசு கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் மலையகத்துக்கும் இடையிலான உறவு பல தசாப்தங்களாவே தொடர்கின்றன. தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்தவர்களெல்லாம் மலையகத் தமிழர்களையும் அரவணைத்துக்கொண்டே பயணித்துள்ளனர், அவர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக விடுதலைக்காக குரலும் கொடுத்துள்ளனர்.இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களுக்கு ஒற்றுமை என்பமே பெரும் சக்தியாக உள்ளது, அந்த ஒற்றுமையை சீர்குலைக்க பேரினவாத சக்திகள் முற்பட்டுவருகின்றன. எனவே, இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் பேசும் சமூகங்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும். அதற்கான ஓர் உறவு பாலமாக தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் இருப்பார் என நம்புகின்றோம்.தலைமைப் பதவியில் இருந்துகொண்டு, தமது சேவைகளை அவர் சிறப்பாக முன்னெடுக்கவும் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கின்றேன் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement