எதிர்வரும் 26ம் திகதி பௌர்ணமி நாளில் சிவனடிபாத மலைக்கு பருவ காலம் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், மின்சார சபையின் ஊழியர்கள் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடிபாத மலை உச்சிவரை மின் இணைப்பு வழங்கும் பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் தேசிய நீர் வடிகால் திணைக்களம் சுத்தமான குடிநீர் வழங்கும் பணி செய்து வருகின்றனர்.
நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் தற்காலிக வர்த்தக நிலையங்கள் அமைக்கும் பணி வர்த்தகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வன பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று இப் பகுதியில் சற்று மழை ஓய்ந்து உள்ளதால் ஏனைய விளம்பரங்கள் செய்யும் நிறுவனங்கள் தங்களது விளம்பர பதாகைகள் தொங்கவிடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு உள்ளனர்.
யாத்திரிகர்கள் நலன் கருதி சகல வசதிகளும் செய்து கொடுக்க மஸ்கெலியா பிரதேச சபை முன் வந்துள்ளது.
ஹட்டன் அரச பேருந்து நிலையம் அதிகாரிகள் நல்லதண்ணி நகரில் பயணிகள் நலன் கருதி தரிப்பிட வசதிகளை ஏற்பாடு செய்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
அதேவேளை யாத்திரிகர்கள் பாதுகாப்பு நலன் கருதி நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர மலைக்கு செல்லும் வழியில் உள்ள ஊசி மலை ,சீத்த கங்குல காவல் நிலையங்கள் இரண்டும் திருத்த வேலைகள் செய்து கொண்டு உள்ளனர்.
இந்நிலையில், சிவனடிபாத மலை பருவ கால ஏற்பாடுகள் யாவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமாகவுள்ள சிவனடி பாதமலை பருவகாலம். ஏற்பாடுகள் தீவிரம்.samugammedia எதிர்வரும் 26ம் திகதி பௌர்ணமி நாளில் சிவனடிபாத மலைக்கு பருவ காலம் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில், மின்சார சபையின் ஊழியர்கள் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடிபாத மலை உச்சிவரை மின் இணைப்பு வழங்கும் பனியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதே போல் தேசிய நீர் வடிகால் திணைக்களம் சுத்தமான குடிநீர் வழங்கும் பணி செய்து வருகின்றனர்.நல்லதண்ணி நகரில் இருந்து சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான சாலையில் தற்காலிக வர்த்தக நிலையங்கள் அமைக்கும் பணி வர்த்தகர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.வன பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளனர்.இன்று இப் பகுதியில் சற்று மழை ஓய்ந்து உள்ளதால் ஏனைய விளம்பரங்கள் செய்யும் நிறுவனங்கள் தங்களது விளம்பர பதாகைகள் தொங்கவிடும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு உள்ளனர்.யாத்திரிகர்கள் நலன் கருதி சகல வசதிகளும் செய்து கொடுக்க மஸ்கெலியா பிரதேச சபை முன் வந்துள்ளது.ஹட்டன் அரச பேருந்து நிலையம் அதிகாரிகள் நல்லதண்ணி நகரில் பயணிகள் நலன் கருதி தரிப்பிட வசதிகளை ஏற்பாடு செய்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.அதேவேளை யாத்திரிகர்கள் பாதுகாப்பு நலன் கருதி நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த வீரசேகர மலைக்கு செல்லும் வழியில் உள்ள ஊசி மலை ,சீத்த கங்குல காவல் நிலையங்கள் இரண்டும் திருத்த வேலைகள் செய்து கொண்டு உள்ளனர்.இந்நிலையில், சிவனடிபாத மலை பருவ கால ஏற்பாடுகள் யாவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.