• Nov 24 2024

மனித உடலால் தாங்க முடியாத அதிக வெப்பம் – இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!

Chithra / Feb 22nd 2024, 9:13 am
image

கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருணாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதிக வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் மனித உடலால் தாங்கிக்கொள்ளக்கூடிய வெப்பத்தை விட அதிக உஷ்ணம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதிக வெப்பத்திலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களையும் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதிகளவு தண்ணீர் அருந்துதல், அதிக சோர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல், 

வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிதல் மற்றும் நிழலான இடங்களில் தங்கியிருத்தல் போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மனித உடலால் தாங்க முடியாத அதிக வெப்பம் – இலங்கையின் 6 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை. கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருணாகல், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய 6 மாவட்டங்களுக்கு அதிக வெப்பம் தொடர்பில் எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இந்த மாவட்டங்களில் மனித உடலால் தாங்கிக்கொள்ளக்கூடிய வெப்பத்தை விட அதிக உஷ்ணம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.அதிக வெப்பத்திலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களையும் திணைக்களம் வெளியிட்டுள்ளது.அதிகளவு தண்ணீர் அருந்துதல், அதிக சோர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிதல் மற்றும் நிழலான இடங்களில் தங்கியிருத்தல் போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement