• Nov 28 2024

கடல் வழியாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற தம்பதி உள்ளிட்ட எட்டு பேர் பொலிஸாரால் கைது...!

Sharmi / May 1st 2024, 10:47 am
image

தமிழகத்தின் - தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் இலங்கைக்கு  தப்பி செல்ல உதவிய ஆறு பேர் என  மொத்தமாக எட்டு பேர் தங்கச்சிமடம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று இரவு தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் நால்வர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் நால்வரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர்  கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், சென்னையில் தங்கி இருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இருவரை தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல்  வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். 

இதனை அடுத்து அவர்களிடமிருந்து பணத்தை பெற்று கொண்ட  இருவரும் வேதாளை பகுதியை சேர்ந்த இன்னொரு நபரை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க  ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து, தம்பதிகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்ட இருவருமாக நால்வரும்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து. பிறப்பட்டு ராமேஸ்வரம் வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள ரிசார்ட் ஒன்றில்  தங்கி இருந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த தம்பதிகள் நேற்றிரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியா  தப்பி செல்ல  திட்டமிட்டது விசாரணையில்  தெரிய வந்ததையடுத்து இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல  உதவிய ஆறு பேர் என மொத்தமாக எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம்  காவல் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.

தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் உள்ள எட்டு பேரிடம்  மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிஸார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 விசாரணைக்கு பின்னர் எட்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

கடல் வழியாக இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற தம்பதி உள்ளிட்ட எட்டு பேர் பொலிஸாரால் கைது. தமிழகத்தின் - தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் மற்றும் இலங்கைக்கு  தப்பி செல்ல உதவிய ஆறு பேர் என  மொத்தமாக எட்டு பேர் தங்கச்சிமடம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று இரவு தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.இவர்கள் நால்வர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் நால்வரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.இதன்போது, இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர்  கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், சென்னையில் தங்கி இருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இருவரை தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல்  வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்களிடமிருந்து பணத்தை பெற்று கொண்ட  இருவரும் வேதாளை பகுதியை சேர்ந்த இன்னொரு நபரை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க  ஏற்பாடு செய்துள்ளனர்.இதனையடுத்து, தம்பதிகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்ட இருவருமாக நால்வரும்  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து. பிறப்பட்டு ராமேஸ்வரம் வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள ரிசார்ட் ஒன்றில்  தங்கி இருந்துள்ளனர்.இந்நிலையில் குறித்த தம்பதிகள் நேற்றிரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியா  தப்பி செல்ல  திட்டமிட்டது விசாரணையில்  தெரிய வந்ததையடுத்து இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல  உதவிய ஆறு பேர் என மொத்தமாக எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம்  காவல் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.தங்கச்சிமடம் காவல் நிலையத்தில் உள்ள எட்டு பேரிடம்  மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிஸார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் எட்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement