• May 18 2024

மயிலத்தமடு போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் 6 பேர் தடுப்புக் காவலில்! samugammedia

Tamil nila / Nov 5th 2023, 9:26 pm
image

Advertisement

மட்டக்களப்பில் நடைபெற்று வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் 6 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்டவர்களில் ஜவர் யாழ் பல்கலைக் கழகத்தையும் ஒருவர் கிழக்கு பல்கலைக் கழகத்தையும் சேர்ந்தவர்கள்.



மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பண்ணையாளர்களின் ஆர்பாட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.இந்த ஆர்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று ஞாயிற்றுக் கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக் கழக மாணவர் சமூகம் ஆதரவு தெரிவித்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.போராட்டம் முடிவுற்று யாழ்பாணம் நோக்கி திரும்பும் வழியில் வந்தாறு மூலைப் பகுதியில் வைத்து சந்திவெளி பொலிசாரினால் விசாரணைக்கு என பொலிஸ் நிலையம் அழைத்து சென்று கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

இதன் போது பொலிசாரினால் சமர்பிக்கப்பட்ட குறித்த வழக்கின் சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிந்து கொண்ட  மட்டக்களப்பு மேலதிக நீதிமன்ற நீதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான அன்வர் சதாக் சந்தேக நபர்களை பிணையில் விடுப்பதற்கான கிராமசேவகரின் நற்சான்றிதழ் குறித்த நேரத்தில் பிணையாளிகளினால் சமர்ப்பிக்கப்படதா பட்சத்தில் சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.



மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பிரதேசத்தில் அயல் மாவட்டத்தின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் காணிகளை ஆக்கிரமித்து பயிர் செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் தங்களது கால் நடைகளுக்கான உணவு இன்றி கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  நில ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராஜா கஜேந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் மட்டக்களப்பு முன்னாள் மாநகர மேயர் சரவனபவன் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதபோதகர் ஜெகதாஸ் ஆகியோர்கள் வருகை தந்து மாணவர்களை விடுவிக்குமாறு பொலிசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.



இப் போராட்டத்திற்கு சிவில் சமூகம் உள்ளிட்ட தமிழ் அரசியல் வாதிகள் தமது அதரவினை நேரடியாக தெரிவித்து வருகின்றனர்.இப் பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் ஜனாதிபதி வாக்குறிதி வழங்கிய போதிலும் இது வரை நிறைவேற்றப்படவில்லை என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இடத்தில் இடத்தை ஆக்கிரமித்து யுத்த காலத்திற்கு முன்னார் குடியேறியுள்ளனரா,என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதி மன்றம் கேட்டுள்ளது.

மயிலத்தமடு போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் 6 பேர் தடுப்புக் காவலில் samugammedia மட்டக்களப்பில் நடைபெற்று வரும் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக் கழக மாணவர்கள் 6 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் ஜவர் யாழ் பல்கலைக் கழகத்தையும் ஒருவர் கிழக்கு பல்கலைக் கழகத்தையும் சேர்ந்தவர்கள்.மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பண்ணையாளர்களின் ஆர்பாட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.இந்த ஆர்பாட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று ஞாயிற்றுக் கிழமை வடக்கு கிழக்கு பல்கலைக் கழக மாணவர் சமூகம் ஆதரவு தெரிவித்து ஆர்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.போராட்டம் முடிவுற்று யாழ்பாணம் நோக்கி திரும்பும் வழியில் வந்தாறு மூலைப் பகுதியில் வைத்து சந்திவெளி பொலிசாரினால் விசாரணைக்கு என பொலிஸ் நிலையம் அழைத்து சென்று கைது செய்யப்பட்டு ஏறாவூர் சுற்றுலா நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.இதன் போது பொலிசாரினால் சமர்பிக்கப்பட்ட குறித்த வழக்கின் சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிந்து கொண்ட  மட்டக்களப்பு மேலதிக நீதிமன்ற நீதிபதியும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியுமான அன்வர் சதாக் சந்தேக நபர்களை பிணையில் விடுப்பதற்கான கிராமசேவகரின் நற்சான்றிதழ் குறித்த நேரத்தில் பிணையாளிகளினால் சமர்ப்பிக்கப்படதா பட்சத்தில் சந்தேக நபர்களை தடுப்புக்காவலில் வைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை பிரதேசத்தில் அயல் மாவட்டத்தின் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் காணிகளை ஆக்கிரமித்து பயிர் செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் தங்களது கால் நடைகளுக்கான உணவு இன்றி கால்நடைகள் இறக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  நில ஆக்கிரமிப்பாளர்கள் குறித்த இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்றைய சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செல்வராஜா கஜேந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப.அரியநேத்திரன் மட்டக்களப்பு முன்னாள் மாநகர மேயர் சரவனபவன் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மதபோதகர் ஜெகதாஸ் ஆகியோர்கள் வருகை தந்து மாணவர்களை விடுவிக்குமாறு பொலிசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர்.இப் போராட்டத்திற்கு சிவில் சமூகம் உள்ளிட்ட தமிழ் அரசியல் வாதிகள் தமது அதரவினை நேரடியாக தெரிவித்து வருகின்றனர்.இப் பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் ஜனாதிபதி வாக்குறிதி வழங்கிய போதிலும் இது வரை நிறைவேற்றப்படவில்லை என பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.இதேவேளை குறித்த இடத்தில் இடத்தை ஆக்கிரமித்து யுத்த காலத்திற்கு முன்னார் குடியேறியுள்ளனரா,என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதி மன்றம் கேட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement