• Nov 28 2024

பலமான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க பொதுஜன பெரமுன தீர்மானம்..!

Chithra / Jan 5th 2024, 11:17 am
image

 

ஜனாதிபதி தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்துடன் கட்சியை கட்டியெழுப்பக்கூடிய, நாட்டின் தற்போதைய நிலைமைக்கு முகம்கொடுக்கும் பலம் கொண்ட ஒருவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நியமிக்கும்.

ஜனநாயக நாட்டில் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய தருணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏனைய கட்சி வெற்றி பெறும் என நினைத்து தேர்தலை ஒத்திவைத்தால் அரசியல் செய்ய முடியாது.

அரசியல் கட்சிகளுக்கு இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகும். அனைத்து முக்கிய தேர்தல்களும் இந்த ஆண்டு நடைபெறும் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் ஒரே ஒரு தேர்தலுக்கு மட்டுமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணம் இல்லை என கூறுபவர்களிடம் நாடாளுமன்றம் நடத்த பணம் உள்ளதா என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.

நாட்டை அபிவிருத்தி செய்த அரசியல் கட்சிகள் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

பலமான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க பொதுஜன பெரமுன தீர்மானம்.  ஜனாதிபதி தேர்தல் திகதி தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் தலைமையகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.நாட்டு மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்துடன் கட்சியை கட்டியெழுப்பக்கூடிய, நாட்டின் தற்போதைய நிலைமைக்கு முகம்கொடுக்கும் பலம் கொண்ட ஒருவரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளராக நியமிக்கும்.ஜனநாயக நாட்டில் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய தருணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏனைய கட்சி வெற்றி பெறும் என நினைத்து தேர்தலை ஒத்திவைத்தால் அரசியல் செய்ய முடியாது.அரசியல் கட்சிகளுக்கு இந்த ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகும். அனைத்து முக்கிய தேர்தல்களும் இந்த ஆண்டு நடைபெறும் என்று நம்பப்படுகிறது.இருப்பினும் ஒரே ஒரு தேர்தலுக்கு மட்டுமே பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த பணம் இல்லை என கூறுபவர்களிடம் நாடாளுமன்றம் நடத்த பணம் உள்ளதா என கேள்வி எழுப்ப விரும்புகின்றேன்.நாட்டை அபிவிருத்தி செய்த அரசியல் கட்சிகள் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து உருவாக்கப்பட்டது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement