மாவிலாறு குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையால் வெருகல் - மாவடிச்சேனையிலுள்ள திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியை ஊடறுத்து இன்று (12) காலை வெள்ளநீர் பரவத் தொடங்கியுள்ளது.
இதனால் இவ் வீதியூடாக பயணிப்போர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதை காணமுடிந்தது.
வெள்ளம் பரவிச் செல்லும் மாவடிச்சேனை வீதிக்கு அருகில் செய்கைப்பண்ணப்பட்ட சுமார் 100 ஏக்கர் வேளாண்மை முழுமையாக நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.
சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வளாகம் வெள்ளநீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.
வெருகல் மாவடிச்சேனை பகுதியிலுள்ள பல வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளமையால் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்தோர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
வெள்ளநீரில் மூழ்கிய சின்னக் கதிர்காமம் ஆலயம். இடம்பெயரும் மக்கள்.samugammedia மாவிலாறு குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையால் வெருகல் - மாவடிச்சேனையிலுள்ள திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியை ஊடறுத்து இன்று (12) காலை வெள்ளநீர் பரவத் தொடங்கியுள்ளது.இதனால் இவ் வீதியூடாக பயணிப்போர் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதை காணமுடிந்தது.வெள்ளம் பரவிச் செல்லும் மாவடிச்சேனை வீதிக்கு அருகில் செய்கைப்பண்ணப்பட்ட சுமார் 100 ஏக்கர் வேளாண்மை முழுமையாக நீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய வளாகம் வெள்ளநீரில் மூழ்கிக் காணப்படுகின்றது.வெருகல் மாவடிச்சேனை பகுதியிலுள்ள பல வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளமையால் சுமார் 30 குடும்பங்களைச் சேர்ந்தோர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.