சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆபத்தான சேறு பூசல்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முதன் முறையாக கொல்ப் அகடமி ஒன்றை ஆரம்பித்து வைத்து நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சேறு பூசல்களில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக எல்.பி.எல் போட்டித் தொடரின் தம்புள்ள கழகம் தொடர்பிலான சம்பவத்தில் என் மீதும் சனத் ஜயசூரிய மீதும் குற்றம் சுமத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுக் குற்றச் செயல்களை தடுக்கும் சட்டத்தை தாமே அறிமுகம் செய்ததாகவும் உலகில் எங்குமில்லா வலுவான சட்டம் இலங்கையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஒன்லைன் சட்டத்தின் ஊடாக சேறு பூசுவோரின் சமூக ஊடக கணக்குகள் தடை செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடக கணக்குகள் தடை. அமைச்சர் விடுத்துள்ள எச்சரிக்கை சில சமூக ஊடகங்கள் திட்டமிட்ட அடிப்படையில் சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.சில சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆபத்தான சேறு பூசல்கள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் முதன் முறையாக கொல்ப் அகடமி ஒன்றை ஆரம்பித்து வைத்து நேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.சேறு பூசல்களில் ஈடுபடும் சமூக ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக எல்.பி.எல் போட்டித் தொடரின் தம்புள்ள கழகம் தொடர்பிலான சம்பவத்தில் என் மீதும் சனத் ஜயசூரிய மீதும் குற்றம் சுமத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.விளையாட்டுக் குற்றச் செயல்களை தடுக்கும் சட்டத்தை தாமே அறிமுகம் செய்ததாகவும் உலகில் எங்குமில்லா வலுவான சட்டம் இலங்கையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.புதிய ஒன்லைன் சட்டத்தின் ஊடாக சேறு பூசுவோரின் சமூக ஊடக கணக்குகள் தடை செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.