• Nov 24 2024

நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு - அழைப்பு விடுத்துள்ள அதிபர் ரணில்..!samugammedia

mathuri / Dec 27th 2023, 10:24 pm
image

இன்று நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகளுக்குமான இலக்கினை அடைவதற்கு கட்சி பேதமின்றி எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தன்னுடன் இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய இரு பிரதான பிரச்சினைகள் உள்ளன.நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது முதல் விடயமாகும். இரண்டாவது விடயம் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும்.

“நாட்டின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில், அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு நாம் முன்னோக்கிச் சென்றால், நிச்சயமாக நாட்டில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளும் தீர்க்கப்படும். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தம்முடன் இணைந்து செயற்படுமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.


நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு - அழைப்பு விடுத்துள்ள அதிபர் ரணில்.samugammedia இன்று நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகளுக்குமான இலக்கினை அடைவதற்கு கட்சி பேதமின்றி எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தன்னுடன் இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய இரு பிரதான பிரச்சினைகள் உள்ளன.நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது முதல் விடயமாகும். இரண்டாவது விடயம் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும்.“நாட்டின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில், அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவ்வாறு நாம் முன்னோக்கிச் சென்றால், நிச்சயமாக நாட்டில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அதேநேரம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளும் தீர்க்கப்படும். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தம்முடன் இணைந்து செயற்படுமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement