• Sep 04 2026

மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகன் கைது! கொலையில் முடிந்த குடும்பத் தகராறு

Chithra / Sep 3rd 2026, 2:57 pm
image


கேகாலை மாவட்டம் கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 55 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பாலுகடுமெட்டியாவ பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று புதன்கிழமை (02) கிடைத்த தகவலையடுத்து, கொகரெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


உயிரிழந்தவர் பாலுகடுமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


நேற்று இரவு உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவரான சந்தேகநபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இதன்போது ஆத்திரமடைந்த சந்தேகநபர், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் தனது மாமனாரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபரான மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மாமனாரை வெட்டிக்கொன்ற மருமகன் கைது கொலையில் முடிந்த குடும்பத் தகராறு கேகாலை மாவட்டம் கொகரெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலுகடுமெட்டியாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 55 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாலுகடுமெட்டியாவ பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று புதன்கிழமை (02) கிடைத்த தகவலையடுத்து, கொகரெல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உயிரிழந்தவர் பாலுகடுமெட்டியாவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நேற்று இரவு உயிரிழந்த நபருக்கும் அவரது மகளின் கணவரான சந்தேகநபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு மோதலாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது ஆத்திரமடைந்த சந்தேகநபர், வீட்டில் இருந்த கூரிய ஆயுதத்தால் தனது மாமனாரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபரான மருமகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொகரெல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement