மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள நீதிமன்ற வீதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றிருந்த நிலையில், சிறுமி தனது தந்தையுடன் இருந்துவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை சிறுமியும் அவரது சகோதரனும் மட்டுமே தனியாக இருந்துள்ள நிலையில்,
தந்தையார் வெளியில் இருந்து வீட்டுக்கு சென்றபோது குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள ஒரு தொட்டியில் சிறுமி கிடப்பதை அவதானித்துள்ளார்.
இந்நிலையில் தந்தையார் சிறுமியை மீட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்டபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏறாவூரில் சோகம் – வீட்டின் குளியலறையில் சிறுமி உயிரிழப்பு மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள நீதிமன்ற வீதியில் அமைந்திருக்கும் வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே சடலமாக மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடு சென்றிருந்த நிலையில், சிறுமி தனது தந்தையுடன் இருந்துவந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை சிறுமியும் அவரது சகோதரனும் மட்டுமே தனியாக இருந்துள்ள நிலையில், தந்தையார் வெளியில் இருந்து வீட்டுக்கு சென்றபோது குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள ஒரு தொட்டியில் சிறுமி கிடப்பதை அவதானித்துள்ளார். இந்நிலையில் தந்தையார் சிறுமியை மீட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்டபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.