யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவிவ்தார்.
சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கத்திற்கு எதிராக பாலியல் ரீதியான இழிவான கருத்தை வெளியிட்டதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.
அதேவேளை, நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இனவெறி அறிக்கைகளை வெளியிடுவதைத் தடுக்கவும் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார்: நளிந்த ஜயதிஸ்ஸ யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா மீது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவிவ்தார்.சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித உரிமைகள் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கத்திற்கு எதிராக பாலியல் ரீதியான இழிவான கருத்தை வெளியிட்டதற்காக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.அதேவேளை, நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இனவெறி அறிக்கைகளை வெளியிடுவதைத் தடுக்கவும் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பதாகவும் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.