• Nov 26 2024

பாடசாலைக்கு முன்பாக குவிக்கப்பட்ட விசேட அதிரடிப் படையினர்...!வழமைக்கு திரும்பிய கல்வி நடவடிக்கைகள்...!

Sharmi / Jun 13th 2024, 12:41 pm
image

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை குழப்ப  எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. 

குறித்த பாடசாலைக்கு முன்பாக  இன்றைய தினம் (13) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்து நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுக் கொண்ட பொலிஸார் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் வழமை போல் நடைபெறுவதற்குரிய பாதுகாப்பை வழங்கியுள்ளனர். 

இதனை அடுத்து பாடசாலைக்கு முன்பாக இன்றைய தினம் (13) விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்  ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முதல் சில தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக பாடசாலையின் தற்போதைய அதிபரை இடமாற்ற வேண்டும் என பாடசாலையின் பழைய மாணவர்கள் என அடையாளம் காணப்பட்ட சிலர் 65 மீற்றர் வீட்டுத் திட்டத்தில் உள்ள பெற்றோர்களிடத்தில் வெற்றுத்தாளில் கையொப்பம் பெற்றுக் கொண்டதுடன்,  இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இரகசிய தகவல்கள் வெளியாகின.

குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபர், மாகாண கல்வி அமைச்சின் நேர்முகப் பரீட்சை ஒன்றுக்கு தோற்ற இருந்த சூழலிலேயே இந்த விஷமத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று வரும் நிலையில் இதனைக் குழப்ப முன்னெடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


பாடசாலைக்கு முன்பாக குவிக்கப்பட்ட விசேட அதிரடிப் படையினர்.வழமைக்கு திரும்பிய கல்வி நடவடிக்கைகள். மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் கல்வி நடவடிக்கைகளை குழப்ப  எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.  குறித்த பாடசாலைக்கு முன்பாக  இன்றைய தினம் (13) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்த உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்து நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவை பெற்றுக் கொண்ட பொலிஸார் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் வழமை போல் நடைபெறுவதற்குரிய பாதுகாப்பை வழங்கியுள்ளனர். இதனை அடுத்து பாடசாலைக்கு முன்பாக இன்றைய தினம் (13) விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்  ஈடுபட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.கடந்த இரண்டு தினங்களுக்கு முதல் சில தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக பாடசாலையின் தற்போதைய அதிபரை இடமாற்ற வேண்டும் என பாடசாலையின் பழைய மாணவர்கள் என அடையாளம் காணப்பட்ட சிலர் 65 மீற்றர் வீட்டுத் திட்டத்தில் உள்ள பெற்றோர்களிடத்தில் வெற்றுத்தாளில் கையொப்பம் பெற்றுக் கொண்டதுடன்,  இவ்வாறானதொரு ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இரகசிய தகவல்கள் வெளியாகின. குறித்த பாடசாலையின் தற்போதைய அதிபர், மாகாண கல்வி அமைச்சின் நேர்முகப் பரீட்சை ஒன்றுக்கு தோற்ற இருந்த சூழலிலேயே இந்த விஷமத்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் சுமுகமாக நடைபெற்று வரும் நிலையில் இதனைக் குழப்ப முன்னெடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement