• Nov 22 2024

சுற்றாடலைப் பாதுகாக்க மக்களின் சுற்றாடல் அறிவை அதிகரிக்க வேண்டும்...!ஆளுநர் லலித் கமகே வலியுறுத்து...!

Sharmi / Jun 13th 2024, 12:25 pm
image

சுற்றாடலைப் பாதுகாக்க, மக்களின் சுற்றாடல் அறிவை அதிகரிக்க வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (11) நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

 இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே இவ்வாறு தெரிவித்தார்.

சுற்றாடல் தொடர்பில் மக்களிடம் உணர்திறன் மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், சிறிபா பிரதேசம் போன்று மிகவும் உணர்திறன் வாய்ந்த சூழலில் மக்கள் ஒழுக்கத்துடன் செயற்படுவது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 சிவனடி பாத மலை பருவகாலம் காலம் நிறைவடைந்ததையடுத்து, சிவனடி பாத மலைக்கு தரிசனம்  செய்ய வந்த பக்தர்களால் சுற்றாடலுக்குள் விடப்படும் குப்பைகளின் அளவுடன் கணக்கில் இருப்பதாக நுவரெலியா ஒருங்கிணைப்புக் குழுவில் தெரியவந்துள்ளது.

சுற்றாடலைப் பாதுகாக்க, மக்களின் சுற்றாடல் அறிவை அதிகரிக்க வேண்டும் எனவும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் ஊடாக அத்தியாவசிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றதா என்பதை அவதானிப்பது மிகவும் அவசியமானது எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.



சுற்றாடலைப் பாதுகாக்க மக்களின் சுற்றாடல் அறிவை அதிகரிக்க வேண்டும்.ஆளுநர் லலித் கமகே வலியுறுத்து. சுற்றாடலைப் பாதுகாக்க, மக்களின் சுற்றாடல் அறிவை அதிகரிக்க வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு.கமகே தெரிவித்தார்.நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று முன்தினம் (11) நுவரெலியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு. கமகே இவ்வாறு தெரிவித்தார்.சுற்றாடல் தொடர்பில் மக்களிடம் உணர்திறன் மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், சிறிபா பிரதேசம் போன்று மிகவும் உணர்திறன் வாய்ந்த சூழலில் மக்கள் ஒழுக்கத்துடன் செயற்படுவது மிகவும் அவசியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிவனடி பாத மலை பருவகாலம் காலம் நிறைவடைந்ததையடுத்து, சிவனடி பாத மலைக்கு தரிசனம்  செய்ய வந்த பக்தர்களால் சுற்றாடலுக்குள் விடப்படும் குப்பைகளின் அளவுடன் கணக்கில் இருப்பதாக நுவரெலியா ஒருங்கிணைப்புக் குழுவில் தெரியவந்துள்ளது.சுற்றாடலைப் பாதுகாக்க, மக்களின் சுற்றாடல் அறிவை அதிகரிக்க வேண்டும் எனவும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் ஊடாக அத்தியாவசிய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில், செயற்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றதா என்பதை அவதானிப்பது மிகவும் அவசியமானது எனவும் ஆளுநர் இதன்போது வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement