• Nov 28 2024

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் எடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை..!

Chithra / Jan 9th 2024, 8:08 am
image


அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் தனியான விசேட பிரிவுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் அலரிமாளிகையில்நேற்று இடம்பெற்றுள்ளதுடன், 

இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்துக்கான அனைத்து மேன்முறையீடுகளுக்கும் இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்கான இரண்டாவது சுற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கைக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சிறப்பு பிரிவுகளுக்கு கிராம மட்டத்தில் அதிகாரி ஒருவரை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.


அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் எடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை. அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் தனியான விசேட பிரிவுகளை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.குறித்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் அலரிமாளிகையில்நேற்று இடம்பெற்றுள்ளதுடன், இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.கடந்த வருடத்துக்கான அனைத்து மேன்முறையீடுகளுக்கும் இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவிற்கான இரண்டாவது சுற்றுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த நடவடிக்கைக்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் விசேட பிரிவொன்றை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.அத்துடன், குறித்த சிறப்பு பிரிவுகளுக்கு கிராம மட்டத்தில் அதிகாரி ஒருவரை நியமிக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement