• Nov 17 2024

சிறப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் - உருத்திரகுமாரன் வலியுறுத்தல்..!!

Tamil nila / Feb 29th 2024, 8:08 pm
image

அனைத்து சிறப்பு முகாம் கைதிகளும் மேலும் தாமதங்கள் அல்லது சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்  தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார் 

அவரது பதிவில் மேலும் தெரிவிக்கையில், 

சிறப்பு முகாமில் தொடர்ந்து சிறைவாசம் என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனை ஆகும்.

ராபர்ட் பயஸ் முருகன் மற்றும் ஜெயக்குமார் 33 வருடங்களாக சிறையில் இருக்கும் சிறப்பு முகாம் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

ஏற்கனவே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு  முகாம்களில் தடுத்து  வைப்பது சட்டவிரோதமான  கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனை ஆகும். சிறப்பு  முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்.

சாந்தனிற்க்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.

மேலும் அவரை மீண்டும் பார்க்கவும் அணைக்கவும் 30 + ஆண்டுகள் காத்திருந்த அவரது தாயாருக்கு மரியாதை கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு அவரது கரங்களை தோழமை உணர்வுடன் பற்றிக் கொள்கின்றது.  அவரது மரணத்திற்கு நீதி கோருகிறது மீதமுள்ள அனைத்து சிறப்பு முகாம் கைதிகளும் மேலும் தாமதங்கள் அல்லது சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.




சிறப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும் - உருத்திரகுமாரன் வலியுறுத்தல். அனைத்து சிறப்பு முகாம் கைதிகளும் மேலும் தாமதங்கள் அல்லது சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்  தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார் அவரது பதிவில் மேலும் தெரிவிக்கையில், சிறப்பு முகாமில் தொடர்ந்து சிறைவாசம் என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனை ஆகும்.ராபர்ட் பயஸ் முருகன் மற்றும் ஜெயக்குமார் 33 வருடங்களாக சிறையில் இருக்கும் சிறப்பு முகாம் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.ஏற்கனவே நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களை சிறப்பு  முகாம்களில் தடுத்து  வைப்பது சட்டவிரோதமான  கொடூரமான மற்றும் சட்டவிரோதமான தண்டனை ஆகும். சிறப்பு  முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும்.சாந்தனிற்க்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.மேலும் அவரை மீண்டும் பார்க்கவும் அணைக்கவும் 30 + ஆண்டுகள் காத்திருந்த அவரது தாயாருக்கு மரியாதை கலந்த வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு அவரது கரங்களை தோழமை உணர்வுடன் பற்றிக் கொள்கின்றது.  அவரது மரணத்திற்கு நீதி கோருகிறது மீதமுள்ள அனைத்து சிறப்பு முகாம் கைதிகளும் மேலும் தாமதங்கள் அல்லது சாட்டுக்கள் இல்லாமல் விடுவிக்கப்பட வேண்டும். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement