• Dec 03 2024

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நடத்த விசேட குழு நியமனம்

Chithra / Oct 15th 2024, 12:34 pm
image


77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தை நடாத்துவதற்குத் தேவையான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 2025.02.04ஆம் திகதி இடம்பெறவுள்ள 77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தை நடாத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் பங்கேற்புடன் அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

குறித்த சுதந்திரதின வைபவத்தைப் பெருமையுடன் ஒழுங்குபடுத்துவதற்கு அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகளின் பங்கேற்புடன் வழிநடாத்தல் குழுவொன்றை நியமிப்பதற்காக நீதி, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை நடத்த விசேட குழு நியமனம் 77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தை நடாத்துவதற்குத் தேவையான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.நாடளாவிய ரீதியில் 2025.02.04ஆம் திகதி இடம்பெறவுள்ள 77 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டத்தை நடாத்துவதற்குத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையில், பிரதமர் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் பங்கேற்புடன் அமைச்சரவைக் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.குறித்த சுதந்திரதின வைபவத்தைப் பெருமையுடன் ஒழுங்குபடுத்துவதற்கு அனைத்து அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதானிகளின் பங்கேற்புடன் வழிநடாத்தல் குழுவொன்றை நியமிப்பதற்காக நீதி, பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement