• Apr 02 2025

பொதுத் தேர்தலின் பின் இந்தியா பறக்கும் ஜனாதிபதி அநுர - அமைச்சர் தகவல்

Chithra / Oct 15th 2024, 12:46 pm
image

 

பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இருந்தபோதும் இதுவரையில் அதற்கான தினம் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பொதுத் தேர்தலை தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைக்க போதுமான கால அவகாசம் இன்மையினால், தேர்தலை தொடர்ந்து மூன்று மாத கால பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கையொன்றை அடுத்த மாதம் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கு இடையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பொதுத் தேர்தலின் பின் இந்தியா பறக்கும் ஜனாதிபதி அநுர - அமைச்சர் தகவல்  பொதுத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.இருந்தபோதும் இதுவரையில் அதற்கான தினம் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை பொதுத் தேர்தலை தொடர்ந்து 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை முன்வைக்க போதுமான கால அவகாசம் இன்மையினால், தேர்தலை தொடர்ந்து மூன்று மாத கால பகுதிக்கான இடைக்கால கணக்கறிக்கையொன்றை அடுத்த மாதம் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கு இடையில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement