• May 24 2026

கிழக்கு காணிகளை பாதுகாக்க விசேட குழு – ஜனாதிபதி அறிவிப்பு

Aathira / May 23rd 2026, 11:26 am
image

கிழக்கு மாகாணத்தில் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விசேட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்படுவதால் மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இதனைத் தடுக்கும் நோக்கில் பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்று (22) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளிட்ட கல்வி நிர்வாக பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாக அமைப்புகள் அரசியல் சார்ந்தவை அல்ல, அவை முழுமையாக நிர்வாக பணிகளாகவே செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கிழக்கு காணிகளை பாதுகாக்க விசேட குழு – ஜனாதிபதி அறிவிப்பு கிழக்கு மாகாணத்தில் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விசேட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்படுவதால் மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனைத் தடுக்கும் நோக்கில் பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.நேற்று (22) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும், அம்பாறை மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளிட்ட கல்வி நிர்வாக பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாக அமைப்புகள் அரசியல் சார்ந்தவை அல்ல, அவை முழுமையாக நிர்வாக பணிகளாகவே செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement