• Nov 25 2024

நாட்டின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்..!

Chithra / Oct 20th 2024, 1:09 pm
image


நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிக வெள்ள ஆபத்துக் கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான மொத்த டெங்கு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 41,212 ஆகும்.

நாட்டின் பல பகுதிகளில் ஆரம்பிக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம். நாட்டின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதிக வெள்ள ஆபத்துக் கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள 22 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை மையப்படுத்தி இந்த டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான மொத்த டெங்கு தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை 41,212 ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement