தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
வெளிக்கள நிலையத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஆளுநர் கடந்த காலங்களில் சிறப்பாக இயங்கிய அந்த நிலையத்தை நெறிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் இடையில் ஏற்பட்ட குழப்பங்களைச் சீர் செய்து அந்த நிலையம் தொடர்ந்து பயணிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், ஆளுநரின் கருத்தை ஆமோதித்ததுடன், 1970ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் பாரம்பரியமான நிறுவனமாக தொண்டைமனாறு வெளிக்கள நிலையம் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். இந்த நிறுவனத்தை மீளவும் கல்விப்புலம் சார்ந்த ஒன்றாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தனிநபர்களால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் மீளவும் முறையான வழிமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
கல்வியோடு பின்னிப்பிணைந்த மிகப்பாரம்பரிய நிலையம் என்பதை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், கடந்த காலங்களில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி வழியாக போசகராக இந்த நிலையத்தில் இருந்தார் என்பதையும், அவர் போசகர் என்பதற்கும் அப்பால் மேலதிகமாக சில நிர்வாக விடயங்களையும் நெறிப்படுத்தியிருந்தார் என்றும் சுட்டிக்காட்டினார்.
தற்போதும் வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை நடத்த அனுமதிப்பது தொடர்பில் தமக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்ட அவர், பரீட்சை, கணக்காய்வு உள்ளிட்ட விடயங்களை ஒழுங்குபடுத்தவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
இதன் பின்னர் தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் தலைவர் உள்ளிட்டவர்கள் கடந்த காலங்களில் நடந்த உள்விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து முன்னர் இருந்தமையைப்போன்று பதவிவழியாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருப்பவரை போசகராக ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும், நிலையத்தின் செயற்பாடுகள் மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தால் கணக்காய்வு செய்யப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்றும் இதைச் செயற்படுத்துவதன் ஊடாகவே எதிர்காலத்தில் தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தலாம் என முன்வைக்கப்பட்ட யோசனையை, தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் ஏற்றுக்கொண்டனர். அத்துடன் இது தொடர்பில் தமது பொதுக்குழுவிலேயே முடிவு எடுக்கலாம் எனவும் குறிப்பிட்டனர்.
வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜெனட்டுடன் கலந்துரையாடலை நடத்தி, யாப்பு மறுசீரமைப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னர் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜெனட் ஆகியோர் பங்கேற்றனர்.
44
தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. வெளிக்கள நிலையத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஆளுநர் கடந்த காலங்களில் சிறப்பாக இயங்கிய அந்த நிலையத்தை நெறிப்படுத்தவேண்டிய தேவை இருப்பதாகக் குறிப்பிட்டார். அத்துடன் இடையில் ஏற்பட்ட குழப்பங்களைச் சீர் செய்து அந்த நிலையம் தொடர்ந்து பயணிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், ஆளுநரின் கருத்தை ஆமோதித்ததுடன், 1970ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் பாரம்பரியமான நிறுவனமாக தொண்டைமனாறு வெளிக்கள நிலையம் இருக்கின்றது எனவும் தெரிவித்தார். இந்த நிறுவனத்தை மீளவும் கல்விப்புலம் சார்ந்த ஒன்றாகவும், நம்பகத்தன்மை மிக்கதாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். தனிநபர்களால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் மீளவும் முறையான வழிமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். கல்வியோடு பின்னிப்பிணைந்த மிகப்பாரம்பரிய நிலையம் என்பதை ஏற்றுக்கொண்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், கடந்த காலங்களில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி வழியாக போசகராக இந்த நிலையத்தில் இருந்தார் என்பதையும், அவர் போசகர் என்பதற்கும் அப்பால் மேலதிகமாக சில நிர்வாக விடயங்களையும் நெறிப்படுத்தியிருந்தார் என்றும் சுட்டிக்காட்டினார். தற்போதும் வெளிக்கள நிலையத்தின் பரீட்சைகளை நடத்த அனுமதிப்பது தொடர்பில் தமக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன எனக் குறிப்பிட்ட அவர், பரீட்சை, கணக்காய்வு உள்ளிட்ட விடயங்களை ஒழுங்குபடுத்தவேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். இதன் பின்னர் தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் தலைவர் உள்ளிட்டவர்கள் கடந்த காலங்களில் நடந்த உள்விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தெரியப்படுத்தினர். இதனையடுத்து முன்னர் இருந்தமையைப்போன்று பதவிவழியாக வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருப்பவரை போசகராக ஏற்றுக்கொள்ளவேண்டும் எனவும், நிலையத்தின் செயற்பாடுகள் மாகாண உள்ளக கணக்காய்வு திணைக்களத்தால் கணக்காய்வு செய்யப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்றும் இதைச் செயற்படுத்துவதன் ஊடாகவே எதிர்காலத்தில் தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தலாம் என முன்வைக்கப்பட்ட யோசனையை, தொண்டைமனாறு வெளிக்கள நிலையத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினர் ஏற்றுக்கொண்டனர். அத்துடன் இது தொடர்பில் தமது பொதுக்குழுவிலேயே முடிவு எடுக்கலாம் எனவும் குறிப்பிட்டனர். வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜெனட்டுடன் கலந்துரையாடலை நடத்தி, யாப்பு மறுசீரமைப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த பின்னர் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி ஒழுங்குபடுத்தல்களை மேற்கொள்ளுமாறு ஆளுநர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கந்தையா பிரட்லி ஜெனட் ஆகியோர் பங்கேற்றனர்.44