• Nov 28 2024

மின் கட்டண திருத்தம் தொடர்பில் IMF பிரதிநிதிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்

IMF
Chithra / Nov 21st 2024, 8:57 am
image


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

இந்த கலந்துரையாடல் இன்று  நடைபெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எம்.உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.

அங்கு, மின் கட்டண திருத்தம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், அவர்களின் யோசனைக்கு அமைவாக மின் கட்டண திருத்தம் தொடர்பிலான தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இதன்படி, இது தொடர்பான முன்மொழிவுப் பிரேரணை எதிர்வரும் சில தினங்களில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இலங்கை மின்சார சபையானது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது.

மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 6.6 வீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்ட போதிலும், இந்தக் கட்டணக் குறைப்பு போதாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இதன் காரணமாக புதிய முன்மொழிவுப் பிரேரணையை தயாரித்து மீண்டும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மின் கட்டண திருத்தம் தொடர்பில் IMF பிரதிநிதிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.இந்த கலந்துரையாடல் இன்று  நடைபெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எம்.உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.அங்கு, மின் கட்டண திருத்தம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னர், அவர்களின் யோசனைக்கு அமைவாக மின் கட்டண திருத்தம் தொடர்பிலான தீர்மானம் எட்டப்படும் என அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.இதன்படி, இது தொடர்பான முன்மொழிவுப் பிரேரணை எதிர்வரும் சில தினங்களில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி இலங்கை மின்சார சபையானது மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையொன்றை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது.மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 6.6 வீதத்தால் குறைக்க முன்மொழியப்பட்ட போதிலும், இந்தக் கட்டணக் குறைப்பு போதாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.இதன் காரணமாக புதிய முன்மொழிவுப் பிரேரணையை தயாரித்து மீண்டும் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement