• Apr 28 2026

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

Chithra / Apr 28th 2026, 10:25 am
image

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுதல் உள்ளிட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும், 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அத்திணைக்களம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.


இந்த இலக்குகளை அடைந்துகொள்வதில் நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.


அதன்படி, தேசிய e-invoicing  முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், முழுமையான திட்டத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு  அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

வரி வருவாயை விரிவுபடுத்துதல் தொடர்பில் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.வரி வருவாயை விரிவுபடுத்துதல், வரி இணக்கத்தை அதிகப்படுத்துதல் மற்றும் நிலுவையில் உள்ள வரிகளை அறவிடுதல் உள்ளிட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும், 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் அத்திணைக்களம் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.இந்த இலக்குகளை அடைந்துகொள்வதில் நிறுவனத்திற்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்பு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.அதன்படி, தேசிய e-invoicing  முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்ட ஏற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன், முழுமையான திட்டத்தை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யுமாறு  அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவுறுத்தினார்.

Advertisement

Advertisement

Advertisement