• Nov 13 2024

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு - ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்யாலயத்தின் விசேட நிகழ்வு

Tharmini / Nov 11th 2024, 1:21 pm
image

2024 ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்யாலயத்தின் நூலக கற்றல் வள நிலையத்தினால் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில் இறுதி நாள் நிகழ்வு இன்று (11) பாடசாலையில் நடைபெற்றது.

அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை நூலக பொறுப்பாசிரியர் ரி.எல்.ஏ.கபீர் வழிநடாத்தலில், இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே.வஹாப்தீனின் வழிகாட்டல் ஆலோசனையுடன் கடந்த பல நாட்களாக திட்டமிட்டபடி இந்நிகழ்வுகள் நடந்தேறியது.

இங்கு, துறை சார்ந்தவர்களினால் கருத்துரை வழங்குதல், ஆசிரியர் மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளினால் நூல்கள் அன்பளிப்பு செய்தல், கட்டுரைப் போட்டி நடாத்தி சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடாத்தி முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.



தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு - ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்யாலயத்தின் விசேட நிகழ்வு 2024 ஒக்டோபர் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு ஒலுவில் அல்-ஹம்றா மஹா வித்யாலயத்தின் நூலக கற்றல் வள நிலையத்தினால் பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் அடிப்படையில் இறுதி நாள் நிகழ்வு இன்று (11) பாடசாலையில் நடைபெற்றது.அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை நூலக பொறுப்பாசிரியர் ரி.எல்.ஏ.கபீர் வழிநடாத்தலில், இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான பிரதி அதிபர் ஜே.வஹாப்தீனின் வழிகாட்டல் ஆலோசனையுடன் கடந்த பல நாட்களாக திட்டமிட்டபடி இந்நிகழ்வுகள் நடந்தேறியது.இங்கு, துறை சார்ந்தவர்களினால் கருத்துரை வழங்குதல், ஆசிரியர் மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளினால் நூல்கள் அன்பளிப்பு செய்தல், கட்டுரைப் போட்டி நடாத்தி சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடாத்தி முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement