• Nov 24 2024

இஸ்லாமிய புதுவருட தினத்தை முன்னிட்டு விஷேட நிகழ்வு

Chithra / Jul 10th 2024, 4:52 pm
image


 

இஸ்லாமிய புதுவருடம் தினத்தை (முஹர்ரம்)  முன்னிட்டு ஹிஜ்ரி 1446 முஹர்ரம் தொடர்பான விஷேட நிகழ்வு கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலய  அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா தலைமையில் இன்று  இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லுலூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்  அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா  சிறப்புரை ஆற்றினார்.

மாணவர்கள் மத்தியில் ஆற்றப்பட்ட இச்சிறப்புரையில் புதிய மாற்றங்களுக்கு முஸ்லிம் சமூகம்' எவ்வாறு முகங்கொடுப்பது தொடர்பிலும்,

முஹர்ரம் நிகழ்வின் சிறப்புக்கள், மாணவர்கள் பேணும் விழுமியங்கள், ஒற்றுமை,சமூக இணக்கப்பாடு உள்ளடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில்  பாடசாலையின் ஆசிரியை சுசான் பாயிஸினால் வழங்கப்பட்ட இனிப்பும் பிரதம அதிதியால் சகல மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவி அதிபர் எம். ஏ. பாதிம் மிஸ்னா, ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


இஸ்லாமிய புதுவருட தினத்தை முன்னிட்டு விஷேட நிகழ்வு  இஸ்லாமிய புதுவருடம் தினத்தை (முஹர்ரம்)  முன்னிட்டு ஹிஜ்ரி 1446 முஹர்ரம் தொடர்பான விஷேட நிகழ்வு கல்முனை  அஸ்-ஸுஹறா வித்தியாலய  அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா தலைமையில் இன்று  இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லுலூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர்  அஷ்ஷெய்க் அன்ஸார் பழீல் மௌலானா  சிறப்புரை ஆற்றினார்.மாணவர்கள் மத்தியில் ஆற்றப்பட்ட இச்சிறப்புரையில் புதிய மாற்றங்களுக்கு முஸ்லிம் சமூகம்' எவ்வாறு முகங்கொடுப்பது தொடர்பிலும்,முஹர்ரம் நிகழ்வின் சிறப்புக்கள், மாணவர்கள் பேணும் விழுமியங்கள், ஒற்றுமை,சமூக இணக்கப்பாடு உள்ளடங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.நிகழ்வின் இறுதியில்  பாடசாலையின் ஆசிரியை சுசான் பாயிஸினால் வழங்கப்பட்ட இனிப்பும் பிரதம அதிதியால் சகல மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் உதவி அதிபர் எம். ஏ. பாதிம் மிஸ்னா, ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement