• May 09 2024

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட விசேடவர்த்தமானி

Chithra / Jan 4th 2023, 7:24 am
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடபட்டுள்ளது. 

இந்த நிலையில்,  மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல வேவைகள், பெட்ரோலிய உற்பத்திகள் – எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம்,  வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, சிகிச்சையளித்தல் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 


அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட விசேடவர்த்தமானி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடபட்டுள்ளது. இந்த நிலையில்,  மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல வேவைகள், பெட்ரோலிய உற்பத்திகள் – எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம்,  வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நோயாளர்களின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, சிகிச்சையளித்தல் ஆகியன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

Advertisement

Advertisement

Advertisement