• Sep 17 2024

அமைச்சு பதவி தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பு..!

Sharmi / Aug 8th 2024, 8:43 am
image

Advertisement

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ச அண்மையில் இராஜினாமா செய்தார்.

இதன் பிரகாரம் இந்த அமைச்சை ஜனாதிபதி தனது கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சு பதவி தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பு. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவி ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் காரணமாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியில் இருந்து விஜயதாச ராஜபக்ச அண்மையில் இராஜினாமா செய்தார்.இதன் பிரகாரம் இந்த அமைச்சை ஜனாதிபதி தனது கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement