• May 20 2024

மலையகப் போக்குவரத்து வீதிகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு விசேட கடிதம்!!

crownson / Dec 20th 2022, 7:15 am
image

Advertisement

நோர்வூட், பொகவந்தலாவ வரையிலான பிரதான பாதை நீண்ட காலமாக புனரமைக்க படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திதி நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும்.

இதன் போது  நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையான நான்கு கிலோமீட்டர் தூர பிரதான பாதை புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார்.

குறித்த வீதி ஊடாக வைத்தியசாலைக்கு அவசர நோயாளர்களை கொண்டு செல்லும்போது இடைநடுவில் நோயாளர்கள் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் அண்மைக்காலங்களில் அதிகளவாக பகுதியாகியுள்ளதாகவும் அத்துடன் இந்த வீதியுடாக போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதனால் வாகன சார்திகளும் பெரிதும் அசோகரிகளுக்கு உள்ளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.

மலையகப் போக்குவரத்து வீதிகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு விசேட கடிதம் நோர்வூட், பொகவந்தலாவ வரையிலான பிரதான பாதை நீண்ட காலமாக புனரமைக்க படாமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் விசேட கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி நுவரெலியாவிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும். இதன் போது  நுவரெலியா மாவட்டத்தில் காணப்படுகின்ற குறைபாடுகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அமைய நோர்வூட் தொடக்கம் பொகவந்தலாவ வரையான நான்கு கிலோமீட்டர் தூர பிரதான பாதை புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். குறித்த வீதி ஊடாக வைத்தியசாலைக்கு அவசர நோயாளர்களை கொண்டு செல்லும்போது இடைநடுவில் நோயாளர்கள் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் அண்மைக்காலங்களில் அதிகளவாக பகுதியாகியுள்ளதாகவும் அத்துடன் இந்த வீதியுடாக போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி பழுதடைவதனால் வாகன சார்திகளும் பெரிதும் அசோகரிகளுக்கு உள்ளாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளதாகவும் பிரதேச சபை தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement