இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபடும் அனைத்து பொலிஸாரும் ஒளிரும் ஜாக்கெட்டுகள் மற்றும் கையுறைகளை அணியுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட சிவப்பு சமிக்ஞை விளக்குகளை மட்டுமே பயன்படுத்தமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், நிலைய கட்டளைத் தளபதிகள் மற்றும் போக்குவரத்து நிலையத் தளபதிகள் இரவுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் இவ்வாறு செய்கிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.
உத்தியோகத்தர்கள் பிரதிபலிப்பு ஜாக்கெட்டுகளை அணியாததால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளமையும், விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபடும் பொலிஸாருக்கு விசேட அறிவிப்பு இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபடும் அனைத்து பொலிஸாரும் ஒளிரும் ஜாக்கெட்டுகள் மற்றும் கையுறைகளை அணியுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.மேலும், இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்த குறிப்பிட்ட சிவப்பு சமிக்ஞை விளக்குகளை மட்டுமே பயன்படுத்தமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள், நிலைய கட்டளைத் தளபதிகள் மற்றும் போக்குவரத்து நிலையத் தளபதிகள் இரவுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் இவ்வாறு செய்கிறார்களா என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.உத்தியோகத்தர்கள் பிரதிபலிப்பு ஜாக்கெட்டுகளை அணியாததால் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளமையும், விபத்துக்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.