• May 17 2024

மின் கட்டணம் குறித்து பொது பயன்பாட்டு ஆணையகத்தின் விசேட அறிவிப்பு! samugammedia

Chithra / Sep 10th 2023, 2:03 pm
image

Advertisement

 மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை 56 வீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அண்மையில் மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆனால் இது தொடர்பாக எந்த கோரிக்கையும் இதுவரை வரவில்லை என்று தலைவர் கூறுகிறார்.

கடந்த ஜூலை 3ம் திகதி 14.2 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டு அதற்கு முன் 70 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படுமாயின் அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும், வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரமே மின்சாரக் கட்டணத்தை திருத்த முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.


மின் கட்டணம் குறித்து பொது பயன்பாட்டு ஆணையகத்தின் விசேட அறிவிப்பு samugammedia  மின்சார கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித கோரிக்கையும் கிடைக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.மின்சார கட்டணத்தை 56 வீதத்தால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அண்மையில் மின்சார நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.ஆனால் இது தொடர்பாக எந்த கோரிக்கையும் இதுவரை வரவில்லை என்று தலைவர் கூறுகிறார்.கடந்த ஜூலை 3ம் திகதி 14.2 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டு அதற்கு முன் 70 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படுமாயின் அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும், வருடத்திற்கு இரண்டு முறை மாத்திரமே மின்சாரக் கட்டணத்தை திருத்த முடியும் எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement