அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் எனவும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறும்,
தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் இராணுவத்தினருக்கு சாகல ரத்நாயக்க பணிபுரை விடுத்துள்ளார்.
மக்களின் பாதுகாப்பு தொடர்பில் இராணுவத்தினருக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட உத்தரவு. அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு இராணுவத்தினருக்கு ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.அத்துடன் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் எனவும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும், அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறும், தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் இராணுவத்தினருக்கு சாகல ரத்நாயக்க பணிபுரை விடுத்துள்ளார்.