• Nov 30 2024

அம்பாறை அனர்த்தத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்ளுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை..!

Sharmi / Nov 29th 2024, 3:31 pm
image

அம்பாறை மாவட்டத்தில் மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்ளுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இன்றையதினம்(29) விசேட துஆப் பிரார்த்தனை நடாத்தப்பட்டது.

குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.எம். முபாறக்கினால் இந்த துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 26 ஆம் திகதி நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டதையடுத்து சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த மேற்படி கல்லூரி மாணவர்கள் சிலர் மாவடிப்பள்ளி பாலத்தின் ஊடாக பயணிப்பதற்காக  உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றிச் சென்ற நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது அதில் பயணித்த அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சில மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட அதேவேளை எட்டுப் பேர் காணாமல் போயிருந்தனர். 

அவர்களில் இதுவரை 05 மாணவர்கள் உட்பட 07 பேர் உயிரிழந்த நிலையில் ஜனாஸாக்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு மாணவரை மீட்கும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




 

அம்பாறை அனர்த்தத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்ளுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை. அம்பாறை மாவட்டத்தில் மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்ளுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இன்றையதினம்(29) விசேட துஆப் பிரார்த்தனை நடாத்தப்பட்டது.குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.எம். முபாறக்கினால் இந்த துஆப் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 26 ஆம் திகதி நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரிக்கு விடுமுறை வழங்கப்பட்டதையடுத்து சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த மேற்படி கல்லூரி மாணவர்கள் சிலர் மாவடிப்பள்ளி பாலத்தின் ஊடாக பயணிப்பதற்காக  உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றிச் சென்ற நிலையில் வெள்ளப் பெருக்கு காரணமாக அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதன்போது அதில் பயணித்த அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சில மாணவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட அதேவேளை எட்டுப் பேர் காணாமல் போயிருந்தனர். அவர்களில் இதுவரை 05 மாணவர்கள் உட்பட 07 பேர் உயிரிழந்த நிலையில் ஜனாஸாக்களாக மீட்கப்பட்டுள்ளனர். மற்றொரு மாணவரை மீட்கும் பணி தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement