• May 23 2026

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நத்தார் விசேட வழிபாடுகள்; ரோந்து பணிகளில் விசேட அதிரடிப்படையினர்

Chithra / Dec 25th 2025, 11:55 am
image

 மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.


மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றன.


புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.


இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.


இதன்போது நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விரைவாக மீட்சிபெறவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.


அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள்,ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.


திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.


அத்துடன் கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தது.


இதன்போது பெருமளவான புலனாய்வுத்துறையினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.விசேட அதிரடிப்படையினர் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.


ஜேசு பிறப்பின் 2025ஆவது ஆண்டாகவுள்ளதனால் பொப் ஆண்டகையினால் ஜுப்லி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



இதேவேளை நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை ஹர்சதன் ரிச்சட்ஸன் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.

இவ் ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.


இதேபோன்று நத்தார் விசேட வழிபாடுகள் கிளிநொச்சியில் பல்வேறு திருச்சபைகளில் சிறப்பாக நடைபெற்றது.

முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு அருட்பணி ஜோசுவா தலைமையில் நடைபெற்றது.

மூதூர் -இருதயநாதர் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது.தேவாலயத்தின் அருட்தந்தை அமல்ராஜ் ஆராதனை நிகழ்வை நடாத்தியிருந்தார்.

இவ் நள்ளிரவு ஆராதனையினையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை நிறைவின்போது மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதையும் காண முடிந்தது.

அதேவேளை தேவாலயத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு சோதனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.   



 

 


மன்னார் மாவட்டத்தின் பிரதான   கிறிஸ்துமஸ்    நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்   நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது.


மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.


இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.


அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது. குறித்த ஆரானைகளின் போது நாட்டு மக்களை பாதுகாக்கவும், நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும்,புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும்  விசேட பிரார்த்தனைகளும்  ஆயரினால் நடாத்தப்பட்டது.


அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் அருட்தந்தையர்கள்  இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.


திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. 


பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நத்தார் விசேட வழிபாடுகள்; ரோந்து பணிகளில் விசேட அதிரடிப்படையினர்  மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய ஜேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்மஸ் பிறப்பினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியால் பேராலயத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றன.புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அடிகளின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கான பேராயர் கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இதன்போது விசேட ஆராதனைகள் நடைபெற்றன.இதன்போது ஜேசு பிறப்பினை குறிக்கும் வகையில் பாலன் பிறப்பு கொட்டில் திறக்கப்பட்டு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றதுடன் கரோல் கீதங்களும் பாடப்பட்டன.இதன்போது நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விரைவாக மீட்சிபெறவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் ஆயரினால் நடாத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆலயத்தின் பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்கள்,ஆயர் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.அத்துடன் கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பலத்த பாதுகாப்பினை வழங்கியிருந்தது.இதன்போது பெருமளவான புலனாய்வுத்துறையினரும் குறித்த பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.விசேட அதிரடிப்படையினர் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.ஜேசு பிறப்பின் 2025ஆவது ஆண்டாகவுள்ளதனால் பொப் ஆண்டகையினால் ஜுப்லி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை மட்டக்களப்பு குருக்கள்மடம் புனித பிரான்சிஸ் அசிசியார் தேவாலயத்தில் இன்று இடம்பெற்றது.இந் நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை ஹர்சதன் ரிச்சட்ஸன் தலைமையில் இடம்பெற்றதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது.இவ் ஆராதனையில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.இதேபோன்று நத்தார் விசேட வழிபாடுகள் கிளிநொச்சியில் பல்வேறு திருச்சபைகளில் சிறப்பாக நடைபெற்றது.முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு அருட்பணி ஜோசுவா தலைமையில் நடைபெற்றது.மூதூர் -இருதயநாதர் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை இடம்பெற்றது.தேவாலயத்தின் அருட்தந்தை அமல்ராஜ் ஆராதனை நிகழ்வை நடாத்தியிருந்தார்.இவ் நள்ளிரவு ஆராதனையினையில் அதிகளவான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை நிறைவின்போது மக்கள் தங்களுக்குள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டதையும் காண முடிந்தது.அதேவேளை தேவாலயத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததோடு சோதனை நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.     மன்னார் மாவட்டத்தின் பிரதான   கிறிஸ்துமஸ்    நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்   நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது.மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது. குறித்த ஆரானைகளின் போது நாட்டு மக்களை பாதுகாக்கவும், நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும்,புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும்  விசேட பிரார்த்தனைகளும்  ஆயரினால் நடாத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் அருட்தந்தையர்கள்  இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது. 

Advertisement

Advertisement

Advertisement