இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இந்திய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவிக்கையில்,
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளால், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திகழ்கிறது.
பல விமான நிறுவனங்களை ஊக்குவிப்பதே அமைச்சகத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. 'உடான்' போன்ற திட்டங்கள், ஸ்டார் ஏர், இந்தியா ஒன் ஏர், ப்ளை 91 போன்ற சிறிய விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமான நிலையங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
இந்த 03 விமான நிறுவனங்களிடம் இருந்தும் வழித்தடங்கள் மற்றும் பயன்படுத்தவிருக்கும் விமானம் குறித்து இந்திய மத்திய அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
அறிக்கையை சமர்பித்த பின்னர் விரைவில் இந்திய வானில் மூன்று புதிய விமான நிறுவனங்களும் தனது சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது- என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்திய விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ விமான நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் பெரும்பாலான வழித்தடங்களில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. டிசம்பர் மாதத் தொடக்கத்தில், இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடியால், நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
பின்னர் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இண்டிகோ விமான நிறுவன பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசு தீர்வு கண்டது.
இந்நிலையில், விமானங்கள் சேவையை ஆரம்பிப்பதற்கு அல் ஹிந்த் ஏர், ப்ளை எக்ஸ்பிரஸ் மற்றும் ஷாங்க் ஏர் ஆகிய 3 புதிய நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய வானில் 03 புதிய விமானங்கள் இந்தியாவில் 3 புதிய விமான நிறுவனங்கள் தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவிக்கையில்,பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கொள்கைகளால், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் ஒன்றாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை திகழ்கிறது.பல விமான நிறுவனங்களை ஊக்குவிப்பதே அமைச்சகத்தின் நோக்கமாக இருந்து வருகிறது. 'உடான்' போன்ற திட்டங்கள், ஸ்டார் ஏர், இந்தியா ஒன் ஏர், ப்ளை 91 போன்ற சிறிய விமான நிறுவனங்கள் உள்நாட்டு விமான நிலையங்களை இணைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.இந்த 03 விமான நிறுவனங்களிடம் இருந்தும் வழித்தடங்கள் மற்றும் பயன்படுத்தவிருக்கும் விமானம் குறித்து இந்திய மத்திய அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கையை சமர்பித்த பின்னர் விரைவில் இந்திய வானில் மூன்று புதிய விமான நிறுவனங்களும் தனது சேவையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது- என்று தெரிவித்துள்ளார். இதேவேளை இந்திய விமான போக்குவரத்து துறையில் இண்டிகோ விமான நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் பெரும்பாலான வழித்தடங்களில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. டிசம்பர் மாதத் தொடக்கத்தில், இந்த நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடியால், நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.பின்னர் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் விதிமுறைகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு இண்டிகோ விமான நிறுவன பிரச்சினைக்கு இந்திய மத்திய அரசு தீர்வு கண்டது. இந்நிலையில், விமானங்கள் சேவையை ஆரம்பிப்பதற்கு அல் ஹிந்த் ஏர், ப்ளை எக்ஸ்பிரஸ் மற்றும் ஷாங்க் ஏர் ஆகிய 3 புதிய நிறுவனங்கள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.