• Dec 18 2024

இலங்கையில் போதைக்கு அடிமையான பெண்களுக்காக விசேட திட்டம்

Chithra / Sep 16th 2024, 8:46 am
image

  

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி நிலையத்தில் 100 பெண்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிலையம் ஊடாக மறுவாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு, இது தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை வவுனியாவில் அமைந்துள்ள இந்த புதிய புனர்வாழ்வு நிலையத்திற்கு புனர்வாழ்விற்காக பரிந்துரைக்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவித்துள்ளது.


இலங்கையில் போதைக்கு அடிமையான பெண்களுக்காக விசேட திட்டம்   போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேற்படி நிலையத்தில் 100 பெண்கள் வரையில் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிலையம் ஊடாக மறுவாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு, இது தொடர்பில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி, போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை வவுனியாவில் அமைந்துள்ள இந்த புதிய புனர்வாழ்வு நிலையத்திற்கு புனர்வாழ்விற்காக பரிந்துரைக்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement