• Feb 16 2026

'கண்ணம்மா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நாளை!

dileesiya / Jan 23rd 2026, 4:40 pm
image

இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் முற்று முழுதாக தயாரிக்கப்பட்ட 'கண்ணம்மா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நாளை   (24) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.


யாழ். ஊடக அமையத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழு இதனை தெரிவித்தது.


ஈழப்போராட்டத்தின் பாதிப்பையும் வலிகளையும் வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.


2J மூவீஸ் தயாரிப்பில் யூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ண பிள்ளை இசையை வழங்கியுள்ளதுடன் படத்தொகுப்பை சிவநேசன் மேற்கொண்டுள்ளார்.


மூத்த கலைஞர்களான ராஜா மகேந்திரசிங்கம், ஜூட் கொலின்ஸ், சபேசன் சண்முகநாதன், கேப்டன் பாஸ்கரன், சுவிஸ் ரகு, ஜாஸ்மின் (பவுண் அக்கா), ஜீவேஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் பல இளம் கலைஞர்களும் இதில் நடித்துள்ளார்கள்.


'கண்ணம்மா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் நாளை இலங்கை கலைஞர்களின் பங்கேற்பில் முற்று முழுதாக தயாரிக்கப்பட்ட 'கண்ணம்மா' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல் யாழ். ராஜா திரையரங்கில் நாளை   (24) மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.யாழ். ஊடக அமையத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட படக்குழு இதனை தெரிவித்தது.ஈழப்போராட்டத்தின் பாதிப்பையும் வலிகளையும் வெளிப்படுத்தும் விதமாக உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.2J மூவீஸ் தயாரிப்பில் யூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணம்மா திரைப்படத்திற்கு பிரசாந் கிருஷ்ண பிள்ளை இசையை வழங்கியுள்ளதுடன் படத்தொகுப்பை சிவநேசன் மேற்கொண்டுள்ளார்.மூத்த கலைஞர்களான ராஜா மகேந்திரசிங்கம், ஜூட் கொலின்ஸ், சபேசன் சண்முகநாதன், கேப்டன் பாஸ்கரன், சுவிஸ் ரகு, ஜாஸ்மின் (பவுண் அக்கா), ஜீவேஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் பல இளம் கலைஞர்களும் இதில் நடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement