• Nov 25 2024

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

Tamil nila / Sep 21st 2024, 8:00 am
image

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக காவல்துறையினர் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். 

 தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 63,000ற்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 3,000ற்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக காவல்துறை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 2,000ற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

 அதேநேரம் சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் தலா 2 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

 அதேநேரம் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்காகவும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

 அத்துடன் காவல்துறை தலைமையகத்தில் விசேட கண்காணிப்பு மையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 9 மாகாணங்களிலும் விசேட கண்காணிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக காவல்துறையினர் உள்ளிட்ட 80,000 பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.  தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 63,000ற்கும் அதிகமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  3,000ற்கும் அதிகமான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக காவல்துறை விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 2,000ற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.  அதேநேரம் சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் தலா 2 காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  அதேநேரம் வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்காகவும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அத்துடன் காவல்துறை தலைமையகத்தில் விசேட கண்காணிப்பு மையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 9 மாகாணங்களிலும் விசேட கண்காணிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement